பொது செய்தி

இந்தியா

மும்பையில் கொரோனாவை வென்று சாதித்த 101 வயது முதியவர்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Mumbai, Covid-19, coronavirus, mumbai news, முதியவர், கொரோனா, குணமடைந்தார், பிறந்தநாள்

மும்பை: மும்பையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 101 வயது முதியவர், பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களே எளிதில் பாதிக்கப்படுவதாகவும், அவர்கள் நோய்த் தொற்றால் இறப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் உலக நாடுகள் கூறுகின்றன. ஆனாலும், அரிதிலும் அரிதாக சில நாடுகளில் 90 வயது, 100 வயதை கடந்தவர்களும் கொரோனாவில் இருந்து குணமான நிகழ்வுகளும் நடந்துள்ளன. அதுபோன்று இந்தியாவிலும் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த சாந்தா பாய் என்ற 100 வயது மூதாட்டி கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.


latest tamil news


அதேபோல் தற்போது மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அர்ஜூன் கோவிந்த் என்னும் முதியவர், பூரண குணமடைந்து நேற்று (ஜூலை 14) டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு இன்று (ஜூலை 15) 101வது பிறந்தநாள் என்பதால், டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்னதாக மருத்துவமனை பணியாளர்களுடன் சேர்ந்து 101வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். பிறந்தநாளுடன் கொரோனாவை வென்றதும் என இரட்டிப்பு சந்தோஷத்துடன் அவர் டிஸ்சார்ஜ் ஆனார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-ஜூலை-202015:53:31 IST Report Abuse
Loganathan Kuttuva பெரிய அதிசயம்
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் இந்த வயசுல நீ என்ன தாத்தா பண்ண போற.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X