சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

கந்தசஷ்டி கவசம் பற்றி அவதூறு : திரைப்பிரபலங்கள் கண்டனம்

Updated : ஜூலை 26, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (75)
Share
Advertisement
kandhasastikavasam, Prasanna, Natrajsubramaniyam, Rajkiran, Kasthuri, கந்தசஷ்டிகவசம், பிரசன்னா, நட்ராஜ், ராஜ்கிரண், கஸ்தூரி,

சென்னை: தமிழகத்தில் ஒரு கூட்டம் வேண்டுமென்றே ஹிந்து மதக் கடவுள்கள் குறித்தும், ஹிந்து மதம் பற்றியும் அவதூறு பரப்புகின்றனர். இதில் கறுப்பர் கூட்டம் என யு-டியூப் தளம் சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் தொடர்பாக அவதுாறு கருத்தை வெளியிட்டது. இதற்கு நடிகர்கள் நட்டி எனும் நட்ராஜ், பிரசன்னா, ராஜ்கிரண் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


நட்ராஜ்


சமூகவலைதளத்தில், ''போங்கடா முட்டாளுங்களா... முருகனை பத்தி சொல்ல, சிவனாலேயே முடியாதுடா. சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் கிடையாது. சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய கடவுளும் கிடையாது. சரவணபவாய நமஹ... வெற்றிவேல் வீரவேல்'' என பதிவிட்டுள்ளார்.


latest tamil news

பிரசன்னா


''எவரும் எவருடைய நம்பிக்கையையும் விமர்சிக்கிறேன் என்று கொச்சைப்படுத்துவது மதச்சார்பின்மைக்கு நல்லதல்ல. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு பெரிது. அதை மதிக்க தெரியாத போக்கிரிகள் யாராயினும் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மதச்சார்பற்ற நாடாக இருக்க முடியும். மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொள்ள செய்வது இன்றளவில் மதநம்பிக்கையினும் அதிமுக்கியம்'' என பதிவிட்டுள்ளார்.


ராஜ்கிரண்


பேஸ்புக் பதிவில், “ஒவ்வொரு மனிதனுக்கும், எந்த வகையிலேனும், தனக்கு பாதுகாப்பு தேடிக்கொள்ள உரிமை இருக்கிறது. அது, அவனது சுதந்திரம். முருகப் பெருமானை நம்புவோர்க்கு, “கந்தர் சஷ்டி கவசம்” என்பது, “ஒரு பாதுகாப்பு அரண்”. இதை ஆழ்ந்து படித்தால், அறிவியல்பூர்வமான, மனோதத்துவரீதியான ஆத்ம பலன்கள் இருக்கின்றன… இறைவனை நம்பாதோர்க்கு, “நம்பாமை” என்பது, அவர்களின் சுதந்திரம்.நம்பிக்கை கொண்டோர்க்கு, “நம்புதல்” என்பது, அவர்களின் சுதந்திரம்.

இதில், அவரவர் எல்லையோடு அவரவர்கள் நின்று கொள்வது தான், மேன்மையானது. தேவையில்லாமல் மற்றவர் எல்லைக்குள் புகுந்து, விமர்சனம் செய்வதென்பது, மிகவும் கீழ்மையானது.


latest tamil news
இந்த கொடிய கொரோனா காலகட்டத்தில், நோயோடும், நோய் பயத்தோடும், பொருளாதார சீர்கேட்டோடும், உண்ண உணவின்றி கோடிக்கணக்கான நம் மக்கள் தவித்துக்கொண்டிருக்கும் சூழலில், இப்படி ஒரு பிரச்சினைக்கு தீ மூட்டுவதில், யாருக்கோ, ஏதோ, உள் நோக்கம் இருப்பதாகவே நினைக்கத் தோன்றுகிறது…” என தெரிவித்துள்ளார்.


கஸ்தூரி


டுவிட்டரில், ''கறுப்பர் கூட்டம் யு-டியூப் சேனலை பார்த்தேன், ஜாதி சமூக நீதி எல்லாம் பேசும் சாக்கில் பிரிவினை, ப்ராஹ்மணத்துவேஷம், ஹிந்துமத அவமதிப்பு, வன்மம் இதை மட்டுமே பேசும் காணொளிகள். பெரியாரிய பெருச்சாளிகள். இவர்களின் அண்டப்புளுகை நிஜமென்று நம்புவதற்கு பெயர்தான் பகுத்தறிவா?'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிம்பிலிக்கி பிளாப்பி - டோலக்பூர் ,இந்தியா
16-ஜூலை-202014:56:52 IST Report Abuse
பிம்பிலிக்கி பிளாப்பி வின்சன்ட் விஜய் சேதுபதி ஏதேனும் கூறினாரா
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
17-ஜூலை-202000:36:24 IST Report Abuse
Aarkayசொன்னாரு சொன்னாரு...
Rate this:
Cancel
V Mohan - London,யுனைடெட் கிங்டம்
16-ஜூலை-202012:39:55 IST Report Abuse
V Mohan Where is Kamal here ask him to put a statement? Hd don't because he is one of them.
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
17-ஜூலை-202000:37:52 IST Report Abuse
AarkayHe'll only respond if there's anything against the minorities He believes only in Jesus and Allah...
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜூலை-202011:07:18 IST Report Abuse
Malick Raja இப்படி சொல்வதெல்லாம் தங்களை விளம்பரப்படுத்துவதற்க்கே உரியதாகும்.. அறிவு பூர்வமாக,மனித மாண்புடன் ,செய்ய வேண்டியதை செய்தால் இனிமேல் இதுபோல கருத்துக்கள் சொல்ல யாரும் முற்படமாட்டார்கள்.. ஸ்ரீ கந்த சஷ்டியை பற்றி சொன்னவர் ஒரு ஹிந்து என்பதை அனைவரும் உணர்ந்து அவரை திருத்தலாம் அல்லது அவரை அணுகி ஸ்ரீ கந்த சஷ்டியின் சிறப்பை உணர்த்தலாம் ஏற்காத பட்சத்தில் இனி மேலும் கருத்துக்கள் சொல்லவேண்டாம் என்று அறிவுரை வழங்கலாம் அதிலும் சரிவராவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாமே தவிர இப்படி கூவியோ ..அறிக்கைகளை விட்டோ .. கண்டனத்தை தெரிவித்தோ செயல்படுவது விழலுக்கிறைத்த நீராகிவிடும் .. மனித மாண்பு ஒவ்வொருவருக்கும் அவசியமான ஏன் இன்றியமையாத ஒன்றாகும்
Rate this:
Covaxin - Bharat Hindustan,இந்தியா
16-ஜூலை-202013:15:28 IST Report Abuse
Covaxin அட தப்ளிக் பயலே... மனித மாண்பை பத்தி நீ பேசுறியா?? உங்க மூர்க்க தப்ளிக் கூட்டமும் தீயமுக ஆதரவு மீடியாவும் நாரமணி கும்பலும்தான் இந்தக் கேவலமான இழிசெயலை செய்வது... இருங்க... .........
Rate this:
Balaji - Chennai,இந்தியா
16-ஜூலை-202015:55:03 IST Report Abuse
BalajiJaami appudiye andha thasleema nasreen, salman rushdie matter paththiyum konjam vevaram jollunga jaami.....
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஜூலை-202011:06:14 IST Report Abuse
Malick RajaCovin. 20.. your words expose your dirtiness birth .. senseless acts .. very ugly being a human ..Shamless guy .. better Corona will take over you.. soon...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X