பொது செய்தி

இந்தியா

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்; 2வது இடத்தில் சென்னை மண்டலம்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
CBSE, Class 10, class 10 Results, சிபிஎஸ்இ, 10ம் வகுப்பு, தேர்வு, முடிவுகள், வெளியீடு

புதுடில்லி: சிபிஎஸ்இ 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 15) வெளியானது. இதில் சென்னை மண்டலம் 2வது இடத்தை பிடித்தது.

நாடு முழுவதும் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் பிப்ரவரி 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் 10ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற்றது. சில பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்ற போதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு அகமதிப்பீடு, செயல்முறை தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண் வழங்க கடந்த மாதம் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.


latest tamil news


இதனால் மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கீடும் பணியில் சிபிஎஸ்இ ஈடுபட்டு வந்தது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த 13ம் தேதி வெளியான நிலையில், இன்று (ஜூலை 15) 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. மாணவர்கள் http://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.


latest tamil news


மொத்தம் பதிவு செய்த 18,85,885 மாணவர்களில் 18,73,015 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 17,13,121 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 91.46 சதவீதத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 0.36 சதவீதம் அதிகமாகும்.


மண்டல வாரியாக தேர்ச்சி விகிதம்


திருவனந்தபுரம் - 99.28 சதவீதம்
சென்னை - 98.95 சதவீதம்
பெங்களூரு - 98.23 சதவீதம்
புனே - 98.05 சதவீதம்
அஜ்மர் - 96.93 சதவீதம்
புவனேஷ்வர் - 93.20 சதவீதம்
போபால் - 92.86 சதவீதம்
சண்டிகர் - 91.83 சதவீதம்
பாட்னா - 90.69 சதவீதம்
டேராடூன் - 89.72 சதவீதம்
பிரக்யாராஜ் - 89.12 சதவீதம்
நொய்டா - 87.51 சதவீதம்
டில்லி மேற்கு - 85.96 சதவீதம்
டில்லி கிழக்கு - 85.79 சதவீதம்
கவுகாத்தி - 79.12 சதவீதம்

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
LAX - Trichy,இந்தியா
15-ஜூலை-202015:26:08 IST Report Abuse
LAX 'Chennai 2வது இடம்' னு தலைப்பிலும் செய்தியிலும் குறிப்பிடத்தெரிஞ்ச உங்களுக்கு.. திருவனந்தபுரம் முதலிடம் னு செய்தியில் ஒரு வரி குறிப்பிட்றதுல என்ன தயக்கம்.. இல்ல.. பாகுபாடு..?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X