பொது செய்தி

தமிழ்நாடு

மதுக்கரை காவல் நிலையத்தில் 7 போலீசாருக்கு கொரோனா

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020
Share
Advertisement

கோவை: கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகிறது. கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு இன்று கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில், கோவை மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட ஏழு போலீசாருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு, அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


latest tamil news




ஒரு வாரத்தில் 21 போலீசார் பாதிப்பு


கோவை மாவட்டத்தில் ஏற்கனவே துடியலூர், போத்தனூர், சூலூர் ஆகிய காவல் நிலையங்கள் கொரோனாவால் மூடப்பட்ட நிலையில், நான்காவது காவல் நிலையமாக மதுக்கரை காவல் நிலையமும் மூடப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கோவையில் 21 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் 570க்கும் மேற்பட்ட போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைப் போல், கோவையிலும் அதிகப்படியான போலீசாருக்கு தொற்று ஏற்படுமோ என்ற அச்சம் போலீசார் மத்தியில் உருவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X