மூக்கினுள் உடைந்து சிக்கிய குச்சி; கொரோனா பரிசோதனையால் உயிரிழந்த குழந்தை

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement
Saudi Boy, Dies, Swab Stick, corona test, Nasal, Nose, COVID-19, Coronavirus, Corona, Covid-19, dubai, சவுதி, குழந்தை, ஸ்வாப் குச்சி, உடைந்து, மூக்கு, பலி

துபாய்: கொரோனா பரிசோதனையின் போது, குழந்தையின் மூக்கினுள் உடைந்து சிக்கியதால், சுவாசக் குழாயில் அடைத்து குழந்தை பரிதாபமாக இறந்துள்ளது.

சவுதி அரேபியாவில் அப்துல்லா அல் ஜவுபான் என்பவரது ஆண் குழந்தை, தீவிர காய்ச்சல் காரணமாக அங்குள்ள பொது மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அதிக உடல் வெப்பநிலை காரணமாக குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் ஸ்வாப் குச்சி, அதாவது மூக்கினுள் சளி மாதிரிகளை எடுக்கப் பயன்படும் குச்சியை குழந்தையின் மூக்கில் விடும்போது அது உடைந்துள்ளது.


latest tamil news


குச்சியை எடுக்க டாக்டர்கள் மயக்க மருந்து செலுத்தினர். ஆனால் குழந்தையின் சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு, குழந்தை சுயநினைவை இழந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல மருத்துவர் பரிசோதனை செய்ய வேண்டும் என அப்துல்லா வலியுறுத்தியபோது, சிறப்பு டாக்டர் விடுப்பில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைவதை உணர்ந்த அப்துல்லா, குழந்தையை வேறு சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கோரியுள்ளார். அனுமதி கிடைத்தும், ஆம்புலன்ஸ் வர தாமதமாகியுள்ளது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தை உயிரிழந்தது தொடர்பாக, நிலைமையை தவறாக கையாண்டது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KayD - Mississauga,கனடா
15-ஜூலை-202020:54:18 IST Report Abuse
KayD 10th standard fail aanavan ellam enginner aa doctor aa irukum ooril world class hopsital irundhallum enna use.. I am sorry for the kid's parents and RIP Baby. entha thappaiyum seiyamal theriyamal thandanai
Rate this:
Cancel
krishnamurthy - chennai,இந்தியா
15-ஜூலை-202020:03:09 IST Report Abuse
krishnamurthy இந்தியாவில் மருத்துவர்கள் ஜாக்கிரதையாக செயல்படவேண்டும்
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
15-ஜூலை-202019:12:15 IST Report Abuse
S. Narayanan பொது மருத்துவமனை அப்படிதான் இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X