சுயமரியாதைக்கு போராட வேண்டிய நிலை: சச்சின்பைலட் வேதனை

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
rajasthan, sachin pilot, ashok ghelot, rahul gandhi, political crisis, congress, cong, சச்சின்பைலட், ராஜஸ்தான், அசாக்கெலாட்,

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் விலகிய பின்னர், முதல்வர் அசோக் கெலாட்டிடம் இருந்து நானும் எனது ஆதரவாளர்களும் சுயமரியாதைக்காக போராட வேண்டிய நிலை இருந்ததாக சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஆங்கில டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் பதவியில் ராகுல் இல்லை. கடந்த ஆண்டு அவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், கெலாட்டும், காங்கிரஸ் செயற்குழுவில் உள்ள அவரது நண்பர்களும், எனக்கு எதிராக ஒன்று சேர்ந்து கொண்டனர். அது முதல், எனது சுயமரியாதைக்காக போராட வேண்டிய நிலை இருந்தது.


latest tamil news



அசோக் கெலாட் மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. எனக்கு சிறப்பு அதிகாரம் அல்லது சலுகை எதுவும் கேட்கவில்லை. தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று தான் நாங்கள் விரும்பினோம். அவர் என்னையும், எனது ஆதரவாளர்களையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைக்க அனுமதிக்கவில்லை. எனது உத்தரவுகளை நிறைவேற்றக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல மாதங்களாக அமைச்சரவை கூட்டம், மாநில காங்கிரஸ் செயற்குழு கூட்டமும் நடக்கவில்லை. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் பதவியில் இருந்து என்ன பயன்? இது தொடர்பாக ராஜஸ்தான் மாநில காங்., பொறுப்பாளர் மற்றும் மூத்த நிர்வாகிகளிடம் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை. கெலாட்டிடமும் தெரிவித்துவிட்டேன். ஆனால், எந்த விவாதமும், ஆலோசனையும் நடத்தவில்லை.

பா.ஜ.,வுடன் இணைந்து செயல்படுகிறேன் என்ற குற்றச்சாட்டில் உண்மையில்லை. ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற கடுமையாக உழைத்த நான், ஏன் சொந்த கட்சிக்கு எதிராகவா செயல்பட போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan D - Coimbatore,இந்தியா
15-ஜூலை-202020:43:30 IST Report Abuse
Nagarajan D சச்சின் பைலட் அவர்களே உங்களுக்கு இதுவரை சுயமரியாதை பற்றி தெரியாதது தான் விசேஷம் சுயமரியாதை இருப்பவர்கள் யாரும் காந்தி கூட்டம் இருக்கும் இடத்தில் இருக்கமாட்டார்கள்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
15-ஜூலை-202020:21:34 IST Report Abuse
blocked user திமுகவில் சேர்ந்தால் சுயமரியாதை டன் கணக்கில் தாராளமாகக்கிடைக்கும்.
Rate this:
Cancel
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூலை-202018:07:42 IST Report Abuse
Janarthanan அவர் என்னையும், எனது ஆதரவாளர்களையும், மாநிலத்தின் வளர்ச்சிக்கு உழைக்க அனுமதிக்கவில்லை -அவர்க்கு பப்பிம்மாவுக்கு 1000 பஸ் ஏற்பாடு பண்ணி தர இத்தாலி குடும்பத்திற்கு கமிஷன் கொடுப்பது தான் முன்னுரிமை ???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X