பொது செய்தி

தமிழ்நாடு

10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க நடவடிக்கை: முதல்வர் இ.பி.எஸ்.,

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
krishnagiri, corona, covid19, Cm, edapadipalanisamy, eps, கொரோனா, முதல்வர், எடப்பாடிபழனிசாமி, இபிஎஸ்,

கிருஷ்ணகிரி: தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக முதல்வர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களிடம் முதல்வர் இ.பி.எஸ்., கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவு. இங்கு,11,919 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொரோனா நோய் தொற்றை தடுப்பதற்காக அனைத்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தேவையான கவச உடைகள், உபகரணங்கள் போதிய அளவு வாங்கப்பட்டுள்ளன. முகக்கவசம், கவச உடைகள் ஆகியவையும் போதியஅளவு வழங்கப்பட்டுள்ளது.


latest tamil news



கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க கூடுதலாக ஆயிரத்திற்கும் மேலான டாக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வீடு வீடாக சென்று கொரோனா பாதிப்பை கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் 10 நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும். சென்னை மாநகராட்சி பகுதியில் 600க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. தமிழகத்தில் தான் அதிகளவு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகத்திற்கு ரூ.672 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

கூட்டுறவு வங்கிளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்படவில்லை. அந்தந்த வங்கிகளின் நிதி கையிருப்பை பொருத்து நகைக்கடன் வழங்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கி கடன் குறித்து அந்தந்த வங்கிகள் முடிவு எடுக்கும். கூட்டுறவு வங்கி கடன்கள் நிறுத்தம் என்பது தவறான தகவல். கூட்டுறவு வங்கியில் டெபாசிட் செய்தவர்கள் பணம் எடுக்க வந்தால், சிக்கல் ஏற்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Guna - Chennai,இந்தியா
15-ஜூலை-202020:59:40 IST Report Abuse
Guna தமிழக மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்கிறது. SUPERRRRRR
Rate this:
Cancel
Guna - Chennai,இந்தியா
15-ஜூலை-202020:56:35 IST Report Abuse
Guna நான்கு மாத தீவிர தாக்குதலுக்கு பிறகு தானா குறைந்து வருவது எல்லாருக்கும் தெரியும். பத்து நாளில் குறைக்க நடவடிக்கை எடுப்பது என எப்போது சொல்வது ? முடிந்து போன கல்யாணத்துக்கு இன்னும் மேளம் வாசிக்கிறார்
Rate this:
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூலை-202019:46:34 IST Report Abuse
rajesh வாய திறந்தா பொய் மட்டும் பேசும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X