மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்; முகேஷ் அம்பானி தந்த இன்ப அதிர்ச்சி

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (14) | |
Advertisement
மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களை தற்போது இருக்கும் விலையை விட பல மடங்கு குறைந்த விலையில் தயாரிக்க உள்ளதாக அறிவித்தார்.மும்பையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம். கொரோனா பரவலால் 43-வது பொதுக் கூட்டம்
Reliance, AGM, 5G, Google, Investment, Ambani, jio, RIL, Android-based operating system, ரிலையன்ஸ், 5ஜி, கூகுள், முதலீடு, ஜியோ

மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவர் முகேஷ் அம்பானி, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களை தற்போது இருக்கும் விலையை விட பல மடங்கு குறைந்த விலையில் தயாரிக்க உள்ளதாக அறிவித்தார்.

மும்பையில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக் கூட்டம். கொரோனா பரவலால் 43-வது பொதுக் கூட்டம் இணைய வழியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அறிவிப்புகளை நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். குறிப்பாக ஜியோவில் பேஸ்புக் நிறுவனத்தை தொடர்ந்து கூகுள் பெரிய தொகையை முதலீடு செய்திருப்பதாக தெரிவித்தார்.


latest tamil news


ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இயங்குதளத்தை தயாரிக்க கூகுள் - ஜியோ ஒப்பந்தம் போட்டுள்ளன. இதற்காக ஜியோவின் 7.7% பங்குகளை ரூ.33,737 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்திய பயனர்களுக்கு தொடக்க நிலை ஸ்மார்ட்போன்களை இந்த கூட்டணி உருவாக்கும். தற்போது இருக்கும் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலையில் ஒரு பங்கு தான் அவை இருக்கும் என கூறியுள்ளார். ஜியோ 5ஜி சேவைக்கு தயாராகிவிட்டதாகவும், அலைக்கற்றை கிடைத்தவுடன் 5ஜி சோதனை தொடங்கும் என்றார்.


latest tamil news



அதே போல் ஜியோ - பேஸ்புக் கூட்டணியானது அதன் இ-காமர்ஸ் தயாரிப்பான ஜியோ மார்ட்டுக்கு வாட்ஸப்பை பயன்படுத்தும். விழாவில் ஓடிடி தளமான (இணைய வழி திரைப்படங்கள், தொடர்கள்) ஜியோ டிவி+ அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, மகன் ஆகாஷ் அம்பானி ஆகியோர் இதனை தொடங்கி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஜூலை-202013:48:24 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு யோவ் அம்பானி. .கொரோனா கிட்டை மலிவு விலையில் கொடுப்பாய் என்று நினைத்தால் தா இப்பவும் திருட்டு வியாபாரம்தான்
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-ஜூலை-202023:06:45 IST Report Abuse
மதுரை விருமாண்டி முகேஷ் அம்பானி தந்த இன்ப அதிர்ச்சி??
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-ஜூலை-202023:04:33 IST Report Abuse
மதுரை விருமாண்டி //பல மடங்கு குறைந்த விலையில் தயாரிக்க உள்ளதாக அறிவித்தார்.// லேபிள் உள்பட சீனா தான்னு சொல்றார்.. வேற பண்ணும் இல்லை..
Rate this:
தமிழன் - சென்னை,இந்தியா
20-ஜூலை-202015:57:46 IST Report Abuse
தமிழன்நீங்கள் கருத்து போட்ட உங்கள் கணிணி அல்லது மொபைல், நான் கருத்துப் போடும் கணிணி இவை அனைத்தும் சீனாவில் தயாரானது என்பது தான் நித்ஹர்சன உண்மை. கொரியாவில் தயாராகும் போன்களின் பல பாகங்களும் சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப் படுகின்றன. அம்பானி குறைந்த பட்சம் இந்தியாவில் அசெம்பிள் செய்வார் என நம்புவோம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X