‛கொரோனா தடுப்பூசிக்காக சித்ரவதைக்குள்ளாகும் குரங்குகள்': உண்மை என்ன?

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
FactCheck, Animal, Cruely, CoronaVaccine, Test, ViralVideo, குரங்குகள், கொரோனா, மருந்து, சோதனை, சித்ரவதை, வைரல் வீடியோ

லண்டன்: கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரமாக பணியாற்றி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி பரிசோதனைக்காக குரங்குகள் சித்ரவதை செய்யப்படுவதாக வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

'கழுத்து மற்றும் கைகள் உலோக வளையங்களால் பூட்டப்பட்டு கட்டப்பட்ட நிலையில், குரங்குகள் அலறும் வீடியோ சமூகவலைதளமான பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவின் சில பகுதிகளில், குரங்குகள் உலோக பிடியின் வலியால் நடுங்குவதோடு கதறுகின்றன. பாதுகாப்பு கவசங்கள் அணிந்த மனிதர்கள், குரங்குகளுக்கு தடுப்பூசியை செலுத்துகின்றனர்.


latest tamil news


ஆனால் குரங்குகள் சித்ரவதை செய்யப்படுவது தொடர்பாக வீடியோக்களை ஆராய்ந்த போது, கடந்தாண்டு அக்டோபர் 20ம் தேதி டி.டபிள்யூ உருது, என்ற ஜெர்மானிய இணையதளம், இந்த ஆய்வகத்தில் இருந்து எந்த விலங்கும் உயிரோடு வருவதில்லை என்ற தலைப்பில் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள ஆய்வகம் ஒன்றில், ரகசிய கேமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த காட்சிகளை தான், கொரோனா தடுப்பூசிக்காக குரங்குகள் சித்ரவதை செய்யப்படுவதாக சிலர் பரப்பி வருகின்றனர்.


latest tamil news


முன்னதாக கடந்தாண்டு அக்.18ம் தேதி யூரோ நியூஸ் இணையதளம் இதே வீடியோ தொடர்பான செய்தியை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த காட்சிகள் ஜெர்மனியின் ஹாம்பர்க்கின் தென்மேற்கில் உள்ள மியென்பெட்டலில் உள்ள மருந்தியல் மற்றும் நச்சுயியல் ஆய்வகத்தில் படமாக்கப்பட்டுள்ளது. உளவாளி ஒருவர், விலங்குகளை கையாளும் உதவியாளராக பணிபுரிந்து வீடியோவை எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கோபமடைந்த விலங்குகள் நல ஆர்வலர்கள், உடனடியாக ஆய்வகத்தை மூட கோரிக்கை விடுத்தனர்.

கொரோனா தடுப்பூசி மருந்துகள் தொடர்பாக பல்வேறு ஆய்வகங்களில் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதனை நடத்தப்படுவது உண்மை தான். ஆனால் குரங்குகளை சித்ரவதை செய்யப்பட்டதாக பரவும் வீடியோவுக்கும், தற்போதைய கொரோனா தடுப்பூசி சோதனைக்கும் எந்த தொடர்பும் இல்லையென நிரூபணமாகியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
15-ஜூலை-202022:15:41 IST Report Abuse
Nallavan Nallavan சிறு பெண் குழந்தைகளைக் கற்பழிக்கும் கயவர்கள், கொலைகாரர்கள், ஏமாற்றும் அரசியல்வாதிகளுக்கு கொரோனாவை உடலில் ஏற்றி, இந்த பரிசோதனைகளை செய்யலாமே ????
Rate this:
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
17-ஜூலை-202015:00:57 IST Report Abuse
RaajaRaja Cholanசிறந்த யோசனை செய்யலாமே...
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
19-ஜூலை-202005:47:57 IST Report Abuse
 Muruga Velபோலி முகத்துடன் வலம் வருபவர்களையும் இதில் சேர்க்கலாம்...
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
15-ஜூலை-202021:31:43 IST Report Abuse
mathimandhiri உலகின் இரண்டாவது பெரிய மருத்துவமாக இன்று ஹோமியோ ஹோமியோ மருத்துவம் உள்ளது. அமெரிக்காவில் உலகின் மிகப் பெரிய ஹோமியோபதி பல்கலைக் கழகம் பிலடெலிபியாவில் இருந்தது.ஹோமியோ மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவ மனைகளும் அந்த நாட்டில் இருந்தன. இங்கிலாந்திலும்,அமெரிக்காவிலும் மிகப் பெரிய ஆங்கில மருத்துவர்களே ஆங்கில மருத்துவத்தின் அனாவசிய , அறுவை சிகிச்சை முறையும், தாண்ட முடியாத தடைகளும், நரம்புகளும் குறுக்கிட்டதை உணர்ந்தே ஹோமியோபதிக்கு மாறினார்கள். அதிலும் அமெரிக்க மருத்துவர்கள் மிகப்பெரும் சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள். இன்றும் பயன்பாட்டில் உள்ள எத்தனையோ மருந்துகளையும் கண்டு பிடித்து மருத்துவ நூல்களையும் உலகுக்கு அளித்திருக்கிறார்கள். அதிலும் ஹெரிங் என்னும் மருத்துவர் பாம்பு விஷத்தில் இருந்து மருந்து தன மகனுடன் சேர்ந்து கண்டு பிடிக்க முயன்ற பரிசோதனைகளில் தன மகனையே பறி கொடுத்திருக்கிறார், எனினும் அயராமல் உழைத்து இன்று எத்தனையோ ஆயிரம் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இருக்கும் லாச்சஸிஸ் என்ற மருந்தைக் கண்டு பிடித்த பின்பே ஓய்ந்ததாகக் கூறுவர். ஆனால் இன்று அமெரிக்க உள்பட எல்லா நாட்டிலும் என்ன நடந்தது/? ஆங்கில முறை மருத்துவத்தின் வியாபார அரக்கர்கள் அங்கு இவை இருந்த சுவடே இல்லாமல் செய்து விட்டார்கள்., பிராணிகளை விதவிதமாக சித்திரவதை செய்யும் கொடுமை அதிக அளவில் தொடர்ந்து வருகிறது. இங்கிலாந்து ராஜா குடும்பத்தினரின் மருத்துவ சிகிச்சை எது தெரியுமா? படைத்திரு
Rate this:
Cancel
l vijayaraghavan - CHENNAI,இந்தியா
15-ஜூலை-202018:58:58 IST Report Abuse
l vijayaraghavan இந்த அரக்கர்கள் தானின்று எளிமையாக சித்த மற்றும் ஆயுர்வேத முறையில் நம்பிக்கையாக குணம் செய்யும் எத்தனையோ வாய்ப்பு இருக்கையில அவற்றை எல்லாம் வலுக்கட்டாயமாக அடக்கி விட்டு ஆங்கில மருத்துவ முறையை நம் மீது திணித்தார்கள். வெள்ளையன் ஆண்ட காலத்தில் இது நடந்தது. இந்திய மக்கள் தொகை மூலம் நம் நாட்டின் மருந்து சந்தை உலகில் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றாக உருவெடுக்கக் காரணமானவன் வெள்ளையன். அப்போதிலிருந்து ஆங்கில மருத்துவமே முதன்மை மருந்தாக இங்கு ஆக்கப்பட்டது. பல்லாயிரக்கான கோடிகள் பன்னாட்டு மருத்துவ கம்பெனிகளால் இங்கிருந்து அள்ளிச் செல்லப் படுகிறது. மக்கள் மனதிலும் அம்முறையே விரைவான மருத்துவ முறை என்று பதிந்து விட்டது. காரணம் மற்ற தேவைகள் வளர்ந்து விட்ட படியால் மக்களுக்கு நேரமின்றிப் போய் விட்டது.எனவே மாற்று முறையை அவர்கள் யோசிக்காதது பன்னாட்டு நிறுவனங்களுக்கெல்லாம் கொண்டாட்டம். அவர்கள் நம் மக்களை விளம்பரங்கள் மூலம் இறுக்கமாகப் பிடித்து வைத்துள்ளார்கள். வாயில்லா ஜீவன்களை வதைப்பது அவர்களுக்கெல்லாம் கரும்பு தின்பது போல.நம் நாட்டில் சித்த மருத்துவ தயாரிப்பான கபசுர குடிநீரில் உள்ள முக்கிய மூலப் பொருட்களை விஞ்ஞான முறையில் எம்ஜியார் மருத்துவப் பல்கலை கழகத்தில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தி தடுப்பு மருந்தை உருவாக்க முயன்று வருவது எவ்வளவோ மேல். அம்முறை வெற்றி பெறுவது உறுதி.சற்று காலம் பிடிபிக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X