சச்சின் பைலட் சதி செய்ததற்கான ஆதாரம் உள்ளது: அசோக் கெலாட்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
ashok Gehlot, Proof, Sachin Pilot, congress, cong, Plotting, rajasthan, rajasthan Govt, BJP, அசோக் கெலாட், சச்சின் பைலட், ஆதாரம், பேரம், பாஜ, பாஜக, ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: ஒரு போதும் பா.ஜ.,வில் இணைய மாட்டேன் என சச்சின் பைலட் கூறிய நிலையில், அவர் பா.ஜ.,வுடன் இணைந்து சதி செய்ததற்கான ஆதாரம் உள்ளது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட், முதல்வர் அசோக் கெலாட்டின் நடவடிக்கைகள் பிடிக்காததால் தனது ஆதரவாளர்களான 18 எம்.எல்.ஏ.,க்களுடன் குருகிராமில் முகாமிட்டுள்ளார். இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை உருவாகியுள்ளது. இதனையடுத்து நடத்தப்பட்ட கட்சி கூட்டங்களில் கொறடா உத்தரவிட்டும் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் பங்கேற்கவில்லை. இதனால் அவர் அமைச்சரவையில் இருந்தும் கட்சி தலைமை பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.


latest tamil news


அவருக்கு ஆதரவாக இருந்த விஸ்வேந்திர சிங் மற்றும் ரமேஷ் மீனா ஆகிய இரு அமைச்சர்களும் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ம.பி., காங்., தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாணியில், சச்சின் பைலட்டும் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக கிசுகிசுக்கப்பட்டது. இது குறித்து பேட்டியளித்த பைலட், தான் ஒரு போதும் பா.ஜ.,வில் இணைய மாட்டேன் என தெளிவுப்படுத்தினார்.

இது பற்றி பேட்டியளித்துள்ள முதல்வர் அசோக் கெலாட், தனது அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகள் சில காலமாக நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் குதிரை பேரம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை 10 நாட்கள் ஓட்டலில் தங்க வைக்காமல் இருந்திருந்தால் மானேசரில் (சச்சின் பைலட் தங்கியுள்ள இடம்) தற்போது நடப்பது அன்றே நடந்திருக்கும்.


latest tamil news


அரசியலில் புதிய தலைமுறையினருக்கு அவர்கள் முறை வரும் வரை பொறுமையாக இருப்பதில்லை. நான் 40 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன், நாங்கள் புதிய தலைமுறையை நேசிக்கிறோம், எதிர்காலம் அவர்களுடையதாக தான் இருக்கும். இவர்கள் மத்திய அமைச்சர்கள், மாநில தலைவர்கள் ஆகிவிட்டனர். எங்கள் காலத்தில் நாங்கள் செய்ததை அவர்கள் கடந்து வந்திருந்தால், புரிந்துகொண்டிருப்பார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


latest tamil news


சச்சின் பைலட் பா.ஜ.,வில் இணைய மாட்டேன் என திட்டவட்டமாக கூறிவிட்டதால், டில்லி தலைமை ‛திரும்பவும் உங்கள் ஜெய்ப்பூர் வீட்டிற்கு வாருங்கள்' என அழைப்பு விடுத்துள்ளது. ராஜஸ்தான் பொறுப்பாளரான அவினாஷ் பாண்டே கட்சியில் பைலட்டுக்கான வாய்ப்பு இன்னும் முடியவில்லை என கூறியுள்ளார். இருப்பினும் கொறடா உத்தரவை மீறியதாக அவர் எம்.எல்.ஏ., பதவியை பறிக்க அசோக் கெலாட் தீவிரம் காட்டி வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-202001:02:49 IST Report Abuse
தல புராணம் சச்சினுக்கு மிட் லைஃப் க்ரைசிஸ் (midlife crisis) எனப்படும் இளவயது அரசியல்வாதியிலிருந்து, கிழவயது அரசியல்வாதி ஆக மாறும்போது ஏற்படும் மாற்றத்தால் ஏற்பட்ட சில ஏமாற்றங்கள்..சின்ன வயசிலேயே மத்தியமந்திரி, முந்திரின்னு "பரம்பரை" "தலைவர்" என்று வளர்ந்த கொழுப்பு.. என்ன கேலாட்டுக்கு அநானாவசியமா செலவு..எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா காலத்திலேயும் கொண்டாட்டம்..
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
15-ஜூலை-202022:19:51 IST Report Abuse
Balasubramanian Ramanathan வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என பேசாதீர்கள். கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள் சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா என்று. நீங்கள் இப்போது செய்ய வேண்டியது இதுதான்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-ஜூலை-202021:59:35 IST Report Abuse
A.George Alphonse இந்த காங்கிரஸ் கட்சியில் முதியோர்கள் தங்கள்பதவிகளை இளம் வயதினருக்கு விட்டுக்கொடுத்தால் கட்சியில் இதுபோன்ற நிகழ்வுகள் ஒருபோதும் நிகழாது.கட்சியும் வலுவடையும்.as long as the aged people are not giving way to youngesters this party not only ruins but also disappeares from national politics once for all.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X