'வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள்': முடிவிலிருந்து பின்வாங்கியது அமெரிக்கா

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

வாஷிங்டன்: 'கொரோனா நெருக்கடியால் பல்கலைக்கழக வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டால், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்' என்ற முடிவை, அந்நாட்டு அரசு கைவிட்டுள்ளது.


latest tamil news




கடந்த 6ம் தேதி அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ஐ.சி.இ.,) தெரிவித்ததாவது:

கொரோனா பரவலால், அமெரிக்காவில் உள்ள பல்கலைகள், அனைத்து பாடப்பிரிவுகளையும் ஆன்லைன் கல்வி முறைக்கு மாற்றி வருகின்றன. அதனால், அமெரிக்காவில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், ஆன்லைன் கல்வி முறைக்கு மாறி வருகின்றனர். அவ்வாறு மாறிய மாணவர்கள், அமெரிக்காவில் தொடர்ந்து தங்க முடியாது.
ஆன்லைன் மூலம் படிப்பதற்கு தங்களை பதிவு செய்த மாணவர்கள், நேரடியாக வகுப்பறையில் கற்கும் வகையில் தங்கள் பாட திட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், குடியேற்றம் தொடர்பான விதிமீறல்கள் உள்ளிட்ட சட்ட விளைவுகளை அவர்கள் சந்திக்க நேரிடும். அமெரிக்காவில் இருந்து அவர்கள் கட்டாயமாக வெளியேற்றப்படுவர்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



கொரோனாவால், அமெரிக்காவில் உள்ள பெரும்பாலான பல்கலைகள், ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அரசின் இந்த முடிவால், பல லட்சம் வெளிநாட்டு மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து, மசெசுயடெஸ் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் ஹாவர்ட் பல்கலைக்கழகம் ஆகியவை வழக்கு தொடர்ந்தன. இவர்கள் வழக்கு தொடர்ந்த அடுத்த இரு நாட்களில், தொடர்ந்து பல பல்கலைகழகங்கள் சார்பாக வழக்குகள் தொடரப்பட்டன. டிரம்ப் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிராக மூன்றே நாட்களில் சுமார் 59 பல்கலைக்கழகங்கள் ஒன்று திரண்டன. இதையடுத்து, 'ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறும், வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்' என்ற முடிவை அரசு கைவிட்டுள்ளது.



latest tamil news



இதுகுறித்து வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாவது:

மாணவர்களின் வகுப்புகள் முழுவதும் ஆன்லைனுக்கு மாற்றப்பட்டால் அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்ற முடிவு, தன்னிச்சையான தவறான நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு.
வெளிநாட்டு மாணவர்களின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. பல்கலைக்கழகங்களை விரைவில் திறக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது. பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டால், இயல்பு நிலை திரும்பிவிட்டது போல காட்சியளிக்கும். அதை தேர்தலில் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள டிரம்ப் நினைக்கிறார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-ஜூலை-202020:47:08 IST Report Abuse
Ramesh Sargam இந்த முடிவை நான் எதிர்பார்த்தேன் . டிரம்ப் இது போன்ற ஒரு சில முடிவுகளை ஏனோ தானோ என்று எடுத்து, பிறகு எதிர்ப்பு வலுவானவுடன் பின்வாங்குவது இது முதல் முறையல்ல. போகட்டும். வெளி நாட்டு மாணவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு இது ஒரு நல்ல செய்தி. உங்கள் படிப்பு எந்தவித தடையுமின்றி தொடர வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X