ஜப்பானில் கொரோனா 2ம் அலை; டோக்கியோவில் 'ரெட் அலர்ட்'

Added : ஜூலை 15, 2020 | |
Advertisement
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அங்கு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.ஜப்பானில் இதுவரை, 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும், தற்போது மீண்டும் கொரோனா பரவல்
tokyo declares, coronavirus red alert, as situation becomes, rather severe, ஜப்பானில் கொரோனா 2ம் அலை, டோக்கியோவில் ரெட் அலர்ட்,

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அங்கு, 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் இதுவரை, 23 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; ஆயிரம் பேர் வரை பலியாகி உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகம் இல்லையென்றாலும், தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. தலைநகர் டோக்கியாவில் கடந்த இரு நாட்களாக நூற்றுக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஷின்ஜுகு நகரில் உள்ள மோலியர் தியேட்டரில் கடந்த சில நாட்களாக நாடகம் அரங்கேற்றப்பட்டது. அதில் நடித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நாடக நிகழ்வில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பார்வையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று டோக்கியோ கவர்னர் யுரிக்கோ கொய்கே, 'டோக்கியோவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இன்று (புதன் கிழமை) முதல் 'ரெட் அலர்ட்' (அவசர நிலை) விடுக்கப்படுகிறது. அனைவரும் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். குடிமக்களுக்கும் வணிகத்தினருக்கும் எச்சரிக்கை விடுக்கும் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்' எனத் தெரிவித்துள்ளார்.

'நாடகப் பார்வையாளர்களில் அதிகப்படியானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. அதனால் தான், டோக்கியோ நகருக்கு கவர்னர் ரெட் அலர்ட் அறிவித்துள்ளார். ஜப்பானில் தற்போது கொரோனாவின் இரண்டாம் அலை வீசத் துவங்கியுள்ள போதிலும், டோக்கியோவில் உள்ள மிகப் பெரிய பன்னாட்டு விமான நிலையமான நரிதாவில் இரண்டாவது ஒடுதளத்தை அடுத்த வாரத்தில் திறக்க ஐப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவை அரசு கைவிட வேண்டும்' என, வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X