சச்சின் பைலட் விவகாரத்தில் மவுனம் கலைத்தார் ராகுல்!

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி,sachin pilot, சச்சின் பைலட்,

புதுடில்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலக வேண்டும் என யார் விரும்பினாலும் அவர்கள் விலகி செல்லலாம் என காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டது. கெலாட்டிற்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். இதனை தொடர்ந்து ஆலோசனைக்கு பிறகு, துணை முதல்வர் பதவியில் இருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டுள்ளார். இதனால், சச்சின் பைலட், பா.ஜ.,வில் இணைவார் என வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார். நான் பா.ஜ.,வில் இணைய போவதில்லை என சச்சின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின், இந்திய மாணவர் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் மத்தியில், ராகுல் பேசியதாக ஏ.என்.ஐ., செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து யாரும் விலக நினைத்தால், அவர்கள் விலகலாம். உங்களை போன்ற இளம் தலைவர்களுக்கு கதவுகள் திறந்தே உள்ளன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



இதனிடையே, தற்போதைய பிரச்னை குறித்து வெளிப்படையாக கருத்து எதையும் தெரிவிக்க வேண்டாம் என அசோக் கெலாட்டிற்கு காங்கிரஸ் மேலிடம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சச்சின் பைலட்டிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்த அசோக் கெலாட் மீது மேலிடம் அதிருப்தியில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANARAJ ABRAHAM - delhi,இந்தியா
19-ஜூலை-202001:13:49 IST Report Abuse
THANARAJ ABRAHAM Apply "K" Plan.Otherwise congress will sink.
Rate this:
Lakshmipathi S - Bangalore,இந்தியா
20-ஜூலை-202010:17:20 IST Report Abuse
Lakshmipathi Swhat is 'K'plan....
Rate this:
Lakshmipathi S - Bangalore,இந்தியா
20-ஜூலை-202010:20:02 IST Report Abuse
Lakshmipathi Swhy not Rahul give his seat to Pilot....
Rate this:
Cancel
sathyam - Delhi,இந்தியா
18-ஜூலை-202014:31:02 IST Report Abuse
sathyam ராஜேஷ் பைலட், மாதவ்ராவ் சிந்தியா , ராஜசேகர ரெட்டி , சஞ்சய் கான்தி போல திறமை வாய்ந்த தலைகள் உருண்டது எப்படி ? நேரு பரம்பரை தவிர அங்கு வெறும் யாரும் வர கூடாது. மண்ணு மோகன், ப. சி . போன்ற அடிமைகள் ஓகே .
Rate this:
Cancel
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
17-ஜூலை-202014:22:45 IST Report Abuse
Srinivasan Rangarajan தகவல் தொழில் நுட்பத் துறையில் (I T Sector) நடுத்தர வயதுள்ள அதிகாரிகளை நீக்கிவிட்டு புதிதாக காலேஜ் முடித்து வருபவர்களை வேலைக்கு அமர்த்துவார்கள் . அது போல சச்சினை போகலாம் என்று சொல்லிவிட்டு மாணவ நிர்வாகிகளை கதவு திறந்து இருக்கிறது வேலைக்கு வாருங்கள் என ராகுல் அழைக்கிறார் . கட்சி விளங்கிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X