பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது; குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சமானது

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 15) புதிதாக 4,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆகவும், பலி எண்ணிக்கை 2,167 ஆகவும் அதிகரித்துள்ளது.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,430 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து
CoronaVirus, CoronaCases, Tamilnadu, Discharge, TN_CoronaUpdates, TN_Health, TN_FightsCorona, Corona, TNGovt, Covid-19, PositiveCases, தமிழகம், கொரோனா, வைரஸ், பாதிப்பு, உயிரிழப்பு, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூலை 15) புதிதாக 4,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது, 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆகவும், பலி எண்ணிக்கை 2,167 ஆகவும் அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று 4,496 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில், 4,430 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் 66 பேர். இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,51,820 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 107 ஆய்வகங்கள் (அரசு-54 மற்றும் தனியார் 53) மூலமாக, இன்று மட்டும் 41,382 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 17 லட்சத்து 36 ஆயிரத்து 747 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.


latest tamil newsஇன்று கொரோனா உறுதியானவர்களில், 2,680 பேர் ஆண்கள், 1,816 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 92,514 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 59,283 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 ஆகவும் உள்ளது. இன்று மட்டும் 5 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 310 ஆக உள்ளது.


latest tamil newsவயது வாரியாக பாதிப்பு

இன்று மட்டும் கொரோனா பாதித்த 68 பேர் உயிரிழந்தனர். அதில், 20 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,167 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 47,340 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 7,531 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,25,736 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 ஆயிரத்து 553 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S. Narayanan - Chennai,இந்தியா
16-ஜூலை-202017:22:16 IST Report Abuse
S. Narayanan நமது பாட்டி வைத்தியத்தில் கொரோனாவுக்கு ஏராளமான மருந்துகள் உள்ளன. அவற்றை அரசு முதலிலேயே கொடுத்திருந்தால் பாதிப்பு இவ்வளவு வந்திருக்காது. கண் கேட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்தால் விளைவு... இப்படித்தான் இருக்கும்.
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
16-ஜூலை-202017:44:49 IST Report Abuse
Vijayநீ எப்படி இந்த கருத்தை 4 மாசம் கழிச்சி போடுரியோ அது மாதிரிதான் .....
Rate this:
Cancel
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
16-ஜூலை-202010:32:14 IST Report Abuse
R.Kumaresan இந்தியா தமிழ்நாட்டில் வைரஸ், வைரஸ் நோய் பரவல், ஊரடங்கு உத்தரவு போட்டு 2167 பேர் பலியாயியுள்ளனர் அதிகம்தான்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூலை-202009:49:03 IST Report Abuse
Lion Drsekar முதலில் இருந்தே இந்திய பாரம்பரிய மருத்துங்களைக் கொடுத்து இருந்தால் இன்று இந்த அளவுக்கு வந்திருக்காது, அதே போன்று கண்டகண்ட கெமிக்கல் கலந்து மக்களின் உயிரை குடிக்கும் சாராயத்தை ஒளித்து தன்னை மற்றும் பனை மரத்தில் இருந்து விற்றால் விவசாயிகளுக்கும் வருமானம் பெருகும், மக்களின் உடல் நலனும் நன்றாக இருக்கும், போதும் மக்களின் உயிரை போக்கி இதுவரை நம்மை அறியாமல் செய்த தவறு போதும், இனியாவது மக்களுக்காக வாழ்ந்தால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X