ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா| Tokyo declares coronavirus red alert as situation becomes rather severe | Dinamalar

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020
Share
டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் அங்கு அதிகபட்ச ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.உலகின் 3வது பொருளாதார சக்தியாக திகழும் ஜப்பானில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அங்கு புதிய பாதிப்புகள்் அதிக அளவில் உறுதியாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக நாளொன்றுக்கு 200 பேர் கொரோனா
japan, capital, corona in japan, spread, red alert, tokyo, Coronavirus, Corona, Covid-19, pandemic, ஜப்பான், தலைநகர், டோக்கியோ, கொரோனா, பரவல், ரெட் அலெர்ட்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் அங்கு அதிகபட்ச ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

உலகின் 3வது பொருளாதார சக்தியாக திகழும் ஜப்பானில் ஆரம்பத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரமாக அங்கு புதிய பாதிப்புகள்் அதிக அளவில் உறுதியாகி வருகிறது. கடந்த நான்கு நாட்களாக நாளொன்றுக்கு 200 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளானதைத் தொடர்ந்து நகரில் அதிக பட்ச ரெட் அலெர்ட் எச்சரிக்கையை கவர்னர் யுரிகோ கொய்கி வெளியிட்டுள்ளார். இதனால் டோக்கியோவாசிகள் அவசியமில்லாத பயணங்களை தவிர்க்கும் மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


latest tamil news


நகரில் கொரோனா இரண்டாம் அலை வீசுவதால் சுற்றுலா ஊக்குவிப்பு போன்ற விஷயங்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஹோட்டல்களை தவிர்த்தல், சமூக விலகல், முகக் கவசம் அணிதல் போன்றவற்றை வலியுறுத்தப்பட்டுள்ளன

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X