பொது செய்தி

தமிழ்நாடு

கோவையில் கொரோனா பரவல் தீவிரம்; தினமும் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால், தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.



latest tamil news




கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில், 188 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டனர். இன்று, மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மதுக்கரை காவல் நிலையத்தில் பணியாற்றும் எட்டு போலீசார் உட்பட, 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,591 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


latest tamil news



கோவை மாவட்டத்திற்கு வெளியூர், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரால் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மாவட்டத்திற்குள் புதிதாக வரும் நபர்கள், கொரோனா வைரஸ் உறுதியானவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். தற்போது கோவை மாநகராட்சியில் மட்டும், 33 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 854க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். தனிமைப்படுத்தப் பட்டவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள், 'வாட்ஸ் ஆப்' மூலம் 'வீடியோ கால்' பேசி அவர்கள் வீட்டில் தான் உள்ளார்களா என, உறுதி செய்து வருகின்றனர்.

கோவையில் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும், வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathish - Coimbatore ,இந்தியா
16-ஜூலை-202002:09:56 IST Report Abuse
Sathish கோவை மக்களிடத்தில் வெளியே சொல்லாமல் மறைக்கப்படும் கொரோனா மரணங்கள். தினமலர் இதை பற்றி ஆராய்ந்து ஒரு கட்டுரை வெளியிடவும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X