பொது செய்தி

இந்தியா

லட்சக்கணக்கான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவார்கள்: சுந்தர் பிச்சை

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement

மும்பை: ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் நிறுவனத்தில், ஜியோவின் ரூ.33,737 கோடி மதிப்பிலான, 7.7 சதவீத பங்குகளை கூகுள் வாங்குவதாக அறிவித்துள்ள நிலையில். கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை, ஜியோவில் முதலீடு செய்வது மிகப்பெரியது எனவும், இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவார்கள் எனவும் மகிழ்ச்சி தெரிவித்தார்.



latest tamil news



விர்ச்சுவல் தொழில்நுட்பம் மூலம் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ் 43வது வருடாந்திர பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில், கூகுள் - ஜியோ ஒப்பந்த அறிவிப்பை முகேஷ் அம்பானி வெளியிட்டுள்ளார். இருதரப்பும் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தின்படி, ஜியோவின் 7.7 சதவீத பங்குகளை. ரூ.33,737 கோடி முதலீடு செய்து. கூகுள் நிறுவனம் வாங்குகிறது. இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனம் 3 மாத காலத்திற்குள், ரூ.2,12,809 கோடி நிதி திரட்டும் வாய்ப்பு உள்ளது என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.


latest tamil news


கடந்த ஏப்., மாதம் பேஸ்புக் நிறுவனம், ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை, ரூ.43,547 கோடிக்கு வாங்கிய நிலையில், தற்போது கூகுள் நிறுவனம் ஜியோவில் இரண்டாவது பெரிய முதலீடு செய்துள்ளது. சில்வர் லேக்,. விஸ்டா இக்யூட்டி, ஜெனரல் அட்லாண்டிக், முபடாலா, இண்டெல், குவால் காம் ஏற்கனவே முதலீடு செய்துள்ள நிலையில், ஜியோவில் முதலீடு செய்யும் 14வது நிறுவனமாக தற்போது கூகுள் இணைந்துள்ளது. நிகழ்ச்சியில், ஜியோ மீட், ஜியோ மார்ட், ஜியோ க்ளாஸ், ஜியோ டிவி பிளஸ் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன.


latest tamil news


நிகழ்ச்சியில் பேசிய கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை பேசுகையில், 'ஜியோவில் நாங்கள் செய்திருப்பது மிகப்பெரிய முதலீடு. அந்நிறுவனத்துடன் இணைந்திருப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. இன்டர்நெட் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாமல் இருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்களின் மீது நாங்கள் கவனம் செலுத்த உள்ளோர். ஜியோ உடனான ஒப்பந்தத்தின் மூலம், அவர்களும் ஸ்மார்ட்போன் சேவையை பயன்படுத்தப் போகிறார்கள். ஸ்மார்ட்போன்கள் மற்றும் மலிவு விலையில் வழங்கப்படும் டேட்டாக்கள் மூலம் மில்லியன் கண்க்கான இந்தியர்கள் ஆன்லைனில் வருகின்றனர். தொழில்நுட்பங்களை உருவாக்கும் வாய்ப்புகளுடன் ஒவ்வொரு இந்தியரையும் இணைக்க நாங்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-202000:01:29 IST Report Abuse
தல புராணம் //டேட்டாக்கள் மூலம் மில்லியன் கண்க்கான இந்தியர்கள் ஆன்லைனில் வருகின்றனர்.// தனிநபர் விவரங்களை அவர்களின் அனுமதியின்றி பதிவு செய்யக்கூடாது ஐரோப்பிய நாடுகள் கடுமையான சட்டங்களை போட்டுவிட்டது. கூகுள் , பேஸ்புக் போன்ற நிறுவனங்களுக்கு அதே ஆப்பை சொருக அமெரிக்கா அடுத்தபடியாக தயார் நிலையில் உள்ளது.. தனிநபர் விவரங்களை திருட கூகுளுக்கு இந்தியா ஒரு சொர்க்கபூமி.. ஆதார் கார்டிலேருந்து, போட்டிருக்கும் அண்டர்வேர் கலர் வரை..
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
15-ஜூலை-202023:17:40 IST Report Abuse
Amirthalingam Shanmugam உலகமயமாக்கல் என்பது தவிர்க்கமுடியாதது. " டிஜிட்டல் டெக்னாலஜி " யை வரவேற்கிறோம். இந்த மாற்றத்தினால் கிடைக்கும் பயன்கள் கடைக்கோடி மக்களுக்கும் போய்ச்சேரவேண்டும்.வலைத்தளங்கள் பாதுகாப்பாகவும் ,மனித சமுதாயம் முன்னேறவும் வழிகாட்டியாக இருக்கவேண்டும்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
15-ஜூலை-202022:18:44 IST Report Abuse
Rajagopal லட்சக் கணணக்கானவர்கள் இதனால் வறுமையிலிருந்து மீண்டால் மிகவும் நல்லது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X