தெலுங்கானாவில் கொரோனா இறப்பு விகிதம் குறைவு

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020
Share
Advertisement

ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கான இறப்பு விகிதம் குறைந்து வருவதாக மாநில சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தெலுங்கானாவில் நோய் தொற்றை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மாநில அரசின் சிறந்த மற்றும் கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கான இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. அத்துடன் நோய் தொற்றில் இருந்து மீட்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இது தொற்றை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த அறிகுறியாகும் என நேற்று சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா பாதிப்புகளில் தேசிய சராசரி இறப்பு விகிதம் 2.7 % முதல் 3 % வரைக்குள் உள்ளது. இது தெலுங்கானாவில் வெறும் 1 % ஆக உள்ளது. சராசரியாக உறுதிப்படுத்தப்பட்ட ஒவ்வொரு 100 பாதிப்புகளுக்கும் தேசிய அளவில் 3 பேர் ஆகவும், மாநிலத்தில் ஒரு நோயாளியாகவும் துரதிஷ்டவசமாக தொற்றால் உயிரிழக்கின்றனர். இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதைவிட தொற்றில் இருந்து குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது மாநில அரசு எடுத்த முயற்சிகளுக்கு நல்ல பலனாக இருக்கிறது. இது மாநிலத்திற்கு மிகவும் ஊக்கமளிக்கும் அறிகுறியாகும். தற்போது, ​​மீட்பு விகிதம் 66 சதவீதமாகவும், நாடு முழுவதும் சராசரி மீட்பு விகிதம் 63 சதவீதமாகவும் உள்ளது.

தொடர்ந்து, மாநிலத்தில் 80 % முதல் 85 % வரை அறிகுறியற்ற பாதிப்புகளுடன் நோயாளிகள் உள்ளனர். இவர்களை பாதிப்புகளின் அடிப்படையில் மாநில அரசு வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்க பரிந்துரை செய்கிறது. மேலும் வீட்டு தனிமைப் படுத்துதலில் உள்ள நோயாளிகளை தீவிரமாக கண்காணித்து, தேவையான உதவிகளையும் வழங்குகிறது. வீட்டு தனிமையில் உள்ள நோயாளிகளும் குணமடைந்து வருகின்றனர். ஆயினும் மக்களும் மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற சுகாதார நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.


latest tamil news
மாவட்டங்களில் சிகிச்சை


தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புடைய நோயாளிகளை பாதிப்புகளின் அடிப்படையில் வீட்டு தனிமை, சிகிச்சை முறைகளும் அளிக்கப்படுகிறது. மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு காந்தி மருத்துவமனை மற்றும் மாவட்டங்களில் உள்ள மக்கள் போதனா மருத்துவமனைகள் ஆகிய மூன்றாம் நிலை மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப் படுகின்றனர். அதனால் மக்கள் காந்தி மருத்துவமனையை எதிர்பார்க்காமல், அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மாவட்டங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை யளிக்கும் திறனை படிப்படியாக அதிகரிக்க முடிந்தது. படிப்படியாக பரவலாக்கலை நோக்கி நகர்கிறோம். மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் அனைத்து தொற்றுக்கான சிகிச்சை முறைகளும் கிடைக்கும்.

வீட்டு தனிமைப்படுத்துதல் வசதி இல்லாதவர்களுக்கு நேச்சர் க்யூர் மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவமனை, எர்ரகடா மற்றும் பழைய நகரத்தில் உள்ள நிஜாமியா திப்பி மருத்துவமனை ஆகியவற்றில் நிறுவன தனிமை மற்றும் தனிமைப்படுத்தல் வழங்கப்படும். தெலுங்கானாவின் மருத்துவ அறிவியல் கழகத்திலும் (TIMS - Telangana Institute of Medical Science)கொரோனா தொற்றுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. லேசான, மிதமான பாதிப்புகளை கொண்டவர்களுக்கு கச்சிபவுலி TIMS மற்றும் தீவிர நோயாளிகளுக்கு காந்தி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுவர். இதற்கிடையில், அரசு மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகள் தேவையான நேரத்தில் கிடைப்பதைக் காட்டும் டாஷ்போர்டு விரைவில் தொடங்கப் படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் தங்கள் குறைகளை பதிவு செய்யக்கூடிய வாட்ஸ்அப் எண்ணையும் அரசாங்கம் கொண்டு வரும். தற்போது, ​​அவர்கள் எந்தவிதமான புகார்களையும் பதிவு செய்ய 104 ஐ டயல் செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X