பொது செய்தி

இந்தியா

கொரோனா தொற்றுக்கு 99 டாக்டர்கள் பலி : 1300 பேர் பாதிப்பு

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 99 டாக்டர்கள் பலியாகி உள்ளனர். மேலும் 1,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.



latest tamil news



இது குறித்து இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி இருப்பதாவது: இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள் சுமார் 11 லட்சம் பேர் உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 99 டாக்டர்கள் பலியாகி உள்ளனர். இவர்களில் 73 டாக்டர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ,19 பேர் 35 வயது முதல் 50 வயதுக்குட்பட்டோர். 7 பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள்

மேலும் மருத்துவர்களின் வேலை நேரம் குறைக்கப்பட வேண்டும் எனவும், பிபிஇக்கள் துப்புரவு பொருட்கள் வழங்குவதில் தினசரி அடிப்படையில் கண்காணிக்கப்பட வேண்டும்.மேலும் ஆபரேஷன் தியேட்டர் உள்ளிட்டவற்றில் சிறப்பு கவனம் தேவை என தெரிவித்துள்ளது.


latest tamil news



மேலும் ஐ.எம்.ஏ தலைவர் டாக்டர் ராஜன் சர்மா மற்றும் கவுரவ பொது செயலாளர்டாக்டர் ஆர்.விஅசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் மருத்துவர்கள் மத்தியில் கோவிட் மரணம் மிகுந்த கவலை அளிக்கிறது. என தெரிவித்துள்ளனர்.

இதனிடையே மத்தியசுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் சார்பில் மருத்துவர்கள் சுகாதாரப்பணியாளர்களின் தொற்று பாதிப்பு குறித்த தகவல் வெளியிடப்படவில்லை . அதே நேரத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிகவுன்சில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhav - Chennai,இந்தியா
15-ஜூலை-202023:17:21 IST Report Abuse
Madhav சம்பளம் பற்றவில்லையென்று போராடிய மருத்துவர்களை திட்டிய சமூகம் சம்பளத்தை உயர்த்தாத அரசு இதை பற்றி கவலை கொள்ளாமல், உயிரை கொடுத்து போராடும் மருத்துவர்கள் வணக்கங்கள்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-ஜூலை-202020:59:50 IST Report Abuse
Ramesh Sargam கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த நமஸ்காரங்கள். சிகிச்சை அளிக்கும்போது கொரோனா தொற்று ஏட்பட்டு இறந்த அத்துணை மருத்துவர்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் ஆன்மா சாந்தியடைய கடவுளை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X