வரும் 17-ஆம் தேதி லடாக் செல்கிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
Rajnath Singh, Defence Minister. Rajnath, Ladakh, visit, Govt sources, centre,  வரும் 17-ஆம் தேதி லடாக் செல்கிறார் ராணுவ அமைச்சர்  ராஜ்நாத்சிங் Ladakh, meet soldiers

புதுடில்லி: இந்திய சீன எல்லையில் பதற்றம் உள்ள நிலையில் இரு தரப்பிலும் படைகளை விலக்கி கொள்வதற்கான பேச்சுவார்த்தை ஒரு புறம் நடந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் இரு நாள் பயணமாக பிரதமர் மோடி திடீரென லடாக் சென்று வீரர்களை சந்தித்து பேசினார்.. மேலும் காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் ஜவான்களை சந்தித்தும் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வரும் 17-ம் தேதி இரண்டு நாட்கள் பயணமாக லடாக், ஸ்ரீநகர் பகுதிகளுக்கு செல்கிறார். அவருடன் ராணுவ தளபதி மற்றும் ராணுவ உயரதிகாரிகள் செல்கிறார்.


latest tamil news



லடாக் மற்றும் ஸ்ரீநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ராஜ்நாத்சிங் ஆய்வு செய்கிறார். லடாக் எல்லையில் சீனாவுடனான மோதல் ஏற்பட்ட நிலையில், ராஜ்நாத் சிங் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.


ரூ. 300 கோடி ஆயுதங்கள் வாங்க அனுமதி



ராணுவ தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம் நடந்தது .இதில் ரூ. 300 கோடி அளவிற்கு ராணுவ தளவாடங்கள், ஆயுதங்கள் வாங்க ஆயுதப்படைக்கு சிறப்பு அதிகாரம் வழங்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundarsvpr - chennai,இந்தியா
15-ஜூலை-202021:48:14 IST Report Abuse
sundarsvpr பாதுகாப்பு அமைச்சர் எல்லையோர ராணுவத்தினரை சந்தித்து உரையாடுவது இந்திய துணைக்கண்டம் உரையாடுவதுபோல் உணர்வு மற்றும் எழுச்சி தோன்றும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X