திருப்பதி கோவில் கைவசம் ரூ.50 கோடி செல்லாத நோட்டுகள்

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (13) | |
Advertisement
திருப்பதி: திருப்பதி கோவில் நிர்வாகம் தன் வசம் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுக்களை மாற்ற நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி மத்திய அரசு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு வங்கிககள் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு கால அவகாசம்அளித்திருந்தன. தொடர்ந்து

திருப்பதி: திருப்பதி கோவில் நிர்வாகம் தன் வசம் உள்ள ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய நோட்டுக்களை மாற்ற நிதியமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.latest tamil newsகடந்த 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ம் தேதி மத்திய அரசு பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாததாக்கியது. இதனையடுத்து ரிசர்வ் வங்கி மற்றும் பல்வேறு வங்கிககள் பழைய நோட்டுக்களை மாற்றுவதற்கு கால அவகாசம்அளித்திருந்தன. தொடர்ந்து பழைய நோட்டுகளை மாற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.

இந்நிலையில் திருமலை திருப்பதி கோவில் உண்டியலில் பக்தர்கள் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செலுத்தி உள்ளனர். இதன்மதிப்பு ரூ. 50 கோடி அளவிற்கு உள்ளது. கடந்த 4 ஆண்டுகாலமாக வங்கியில் பரிமாற்ற முடியாமல் இருந்து வந்தாக கூறப்படுகிறது.


latest tamil newsஇதனிடையேதிருமலை திருப்பதி கோவில் அறக்கட்டளை தலைவர் ஓய்.வி.,சுப்பாரெட்டி, பக்தர்கள் காணிக்கையாக வழங்குவதை நிராகரிக்க முடியாது என கூறினார்.மேலும்
புதுடில்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவர் சந்தித்தார். அப்போது கோவில் வசம் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுக்கள் இருப்பதை கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் அதனை மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இது குறித்து ஆராய்வதாகவும் வங்கிஅதிகாரிகளுடன் பேசுவதாகவும் அமைச்சர் தெரிவித்ததாக சுப்பா ரெட்டி கூறினார்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
16-ஜூலை-202014:20:39 IST Report Abuse
Thiagarajan Kodandaraman அட கோவிந்தா ..உங்களோட பணத்துக்கே சோதனையா ...
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
16-ஜூலை-202012:02:11 IST Report Abuse
suresh kumar திருப்பதிக்கு ரூ.50 கோடி பெரிய தொகை அல்ல. அழித்துவிடுவது நல்லது.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
16-ஜூலை-202010:50:34 IST Report Abuse
Girija சட்டம் என்பது வழிமுறையை உணர்த்துவதற்குத்தான் அதுவே கடவுள் அல்ல. தேவைப்படும் நேரத்தில் சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து செம்மை படுத்தலாம். கோவில் வியாபார தளம் அல்ல, எனவே கோவில் மூலம் யாரும் பணத்தை மாற்ற இயலாது, நிதி அமைச்சகம் இதை மாற்றி தர வேண்டும். திருப்பதி மட்டும் அல்ல, ஏராளமான வெளிநாடுகளும், உதாரணத்திற்கு நேப்பாள் மற்றும் உலகமுழுவதும் உள்ள மணி எஸ்ச்சஞ்களும் மாற்றி தர இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. ரகுராம் ராஜன் தெய்வமே இப்படி ஒரு ஆள் ரிசர்வ் வாங்கி கவர்னராக வந்ததற்கு என்ன பாவம் செய்தோமோ? இன்று வீட்டு கடன் வட்டி 7% என்று சொல்கிறது ரிசர்வ் வங்கி. இதை 2014 காலகட்டங்களில் செய்திருந்தால் ரியல் எஸ்டேட் அமோகமாக செழித்திருக்கும் இந்தியா முழுவதும். இதை செய்ய தலையாய் அடித்துக்கொண்டும் இந்த அமெரிக்க அபிமானி பல மக்கள் சோற்றில் மண்ணைத்தான் அள்ளிப்போட்டார் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X