சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி; 'யூ டியூப் சேனல்' நிர்வாகி கைது

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (113)
Share
Advertisement
சென்னை : ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது, மதக்கலவரத்தை துாண்டுதல் உட்பட, ஐந்து பிரிவுகளில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.'கருப்பர் கூட்டம்' யு டியூப் சேனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சேனலை தடை செய்ய
kantha sasti kavasam, karuppar kootam, arrest

சென்னை : ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது, மதக்கலவரத்தை துாண்டுதல் உட்பட, ஐந்து பிரிவுகளில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

'கருப்பர் கூட்டம்' யு டியூப் சேனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சேனலை தடை செய்ய வேண்டும்' என, சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ., வழக்கறிஞர் அணி தலைவர், பால் கனகராஜ், 13ல் புகார் அளித்தார். இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை கோரி, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர், ராம.ரவிகுமார் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதுகுறித்து, சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சர்ச்சைக்குரிய, யு டியூப் சேனல்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம், 153. ஆத்திரமூட்டி கலகம் ஏற்படுத்துதல், 153 ஏ, பேச்சு, எழுத்தால், மத, இன, மொழி, ஜாதி, சமய விரோத உணர்ச்சிகளை துாண்டிவிட முயற்சி செய்தல், 505 (1) மதக்கலவரத்தை துாண்டுவது என, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


latest tamil news
ஒருவர் கைது:


சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளி களை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில், சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49 என்பவரை நேற்று இரவு போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


கமிஷனர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்:


ஹிந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த, 40க்கும் மேற்பட்டோர், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, கலெக்டர் சீதாலட்சுமியை சந்தித்து, புகார் அளித்தனர்.பின், ஹிந்து முன்னணி அமைப்பினர் கூறுகையில், 'தமிழகத்தில், மத மோதல்களை உருவாக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, வீடியோ பதிவிடப்பட்டு உள்ளது. எனவே, காவல் துறை அலட்சியம் காட்டாமல், சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என்றனர்.

இதற்கிடையில், 'கந்த சஷ்டி கவசத்தை இழிவுப்படுத்திய நபர்களை கைது செய்யாமல் இருப்பது ஏன்?' என, விளக்கம் கேட்டு, நேற்று மாலை, 4:30க்கு, போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன், அரவிந்தன் சங்கர் என்பவர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார். 'வாட்ஸ் ஆப்' குழு வாயிலாக, அவரது நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்தார். பேச்சு நடத்திய போலீசார், அவரை, வேப்பேரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, சமரசம் செய்து அனுப்பினர்.

Advertisement
வாசகர் கருத்து (113)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
21-ஜூலை-202019:46:22 IST Report Abuse
dina யவன் அப்பன் வீடு சொத்து? தமிழும் ........தமிழகமும்.......... அது இன்று தி மு க வின் திருடர்கலால் அவமானம் கருணாநிதி உலக பொது மரை திருக்குறளுக்கு விளக்கம் எழுத்துவானம் அவன் அடி ஆட்கள் தமிழ் கடவுளை கேவலப்படுத்துவர்களாம் என்ன கொடுமை சரவணா..........
Rate this:
Cancel
Dadu - Chennai,இந்தியா
20-ஜூலை-202020:36:15 IST Report Abuse
Dadu தமிழ்மறை திருக்குறளை படித்து வாழ இந்த கூட்டம் முதலில் முனையவேண்டும். தரம் தாழ்ந்த செயல் தண்டனைக்கு உரியது.
Rate this:
Cancel
Dadu - Chennai,இந்தியா
20-ஜூலை-202020:33:41 IST Report Abuse
Dadu அறம் பற்றி பேச ஓர் அருகதை வேண்டும். முதலில் தமிழ்மறை திருக்குறளை படித்து வாழ இந்த கூட்டம் முதலில் முனையவேண்டும். மதமாற்ற மற்றும் திராவிட கட்சிகளிடம் பணம் வாங்கி தரம் தாழ்ந்த செயல் செய்தமைக்கு தண்டனை உண்டு. பாவ மன்னிப்பு() எல்லாம் கிடையாது இங்கே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X