சவுதியில் ஒரே நாளில் புதிதாக 2,671 பேருக்கு கொரோனா தொற்று

Updated : ஜூலை 15, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
ரியாத் : சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,671 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 42 பேர் பலியாகினர். கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இந்நிலையில் தொற்றுக்கு நேற்று ஒரு நாளில் 59,000 பிசிஆர் பரிசோதனை (PCR Test) நடத்தப்பட்டது. பரிசோதனையில் 2,671 பேருக்கு

ரியாத் : சவுதியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,671 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 42 பேர் பலியாகினர்.latest tamil newsகொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இந்நிலையில் தொற்றுக்கு நேற்று ஒரு நாளில் 59,000 பிசிஆர் பரிசோதனை (PCR Test) நடத்தப்பட்டது. பரிசோதனையில் 2,671 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்படும். நாட்டில் மொத்தமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 2,40,474 ஆக அதிகரித்துள்ளன. நேற்று கொரோனா பாதிப்புக்கு மேலும் 42 பேர் பலியாகினர். சவுதியில் நோய் தொற்றுக்கு இதுவரை 2,325 பேர் பலியாகியுள்ளனர்.


latest tamil news


தற்போது சவுதியில், 5,488 பேர் முழுமையாக குணமடைந்து உள்ளனர். நாட்டின் நோய் தொற்றுகளில் இருந்து இதுவரை 1,83,048 பேர் மீட்கப்பட்டுள்ளனர். குணமடைந்தவர்களின் விகிதம் 76 சதவீதமாக உள்ளது. சவுதியில்தற்போது 55,010 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவற்றில் 2,221 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
17-ஜூலை-202005:35:21 IST Report Abuse
 Muruga Vel ராத்திரி மூணு மணிக்கு தூக்கம் வராம அவஸ்தை படறீங்க ..
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜூலை-202010:41:57 IST Report Abuse
Malick Raja சவூதி அரேபியாவில் கொரோனா தாக்கம் குறைந்து கொண்டு வருகிறது ..4500.வரை தினத்தொற்று படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது அதிலும் 100%.தளர்வுகளுடன் வழக்கமான நிலையில் அனைத்தும் நடக்கிறது .. இறப்பு விகிதம் குறைந்து கொண்டிருக்கிறது 75. - 90.. 120. வரை இழப்புக்கள் 40.வரை குறைந்துள்ளது .. குணம்பெற்றோர் 75%.சதவீதத்தில் இருக்கிறது .. ஆக கொரோனா கட்டுக்குள் வந்துகொண்டிருப்பது சவுதியில் இருக்கும் அனைவருக்கும் நலச்செய்தியாக இருக்கிறது .. எந்த நாட்டிலும் இல்லாத நிலையில் முதனிலையில் கொரோனாவை அகற்றும் நாடாக சவூதி அரேபியா இருக்கப்போகிறது ..
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
16-ஜூலை-202010:32:23 IST Report Abuse
Balasubramanian Ramanathan சவூதி ராஜா உங்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-ஜூலை-202012:21:42 IST Report Abuse
Malick Rajayou have to worry yourself only because vadakkuppatti will become in danger zone because of you ... In Saudi Arabia all Indians are OK .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X