பொது செய்தி

இந்தியா

அரசியலுக்காக ராமரை இழுக்க வேண்டாம்: நேபாள பிரதமருக்கு ஹிந்து அமைப்புகள் சூடு

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 15, 2020 | கருத்துகள் (19)
Share
Advertisement
Nepal,PM, Oli, Lord Ram, Nepali, நேபாள பிரதமர், ஹிந்து அமைப்புகள், ராமர், ஒலி

லக்னோ: நேபாளத்தில் ராமர் பிறந்ததாக கூறிய, அந்நாட்டு பிரதமர் கே.எம்.சர்மா ஒலிக்கு, விஸ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

சில தினங்களுக்கு முன், நேபாள கவி, பானுபக்தா பிறந்த நாள் நிகழ்ச்சியில் பேசிய சர்மா ஒலி, 'ராமர் அயோத்தியில் பிறக்கவில்லை; நேபாளத்தில், தோரி என்ற இடத்தில் தான் பிறந்தார்' என, தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு, நேபாள ஆளுங்கட்சியினரே, கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணியை மேற்கொண்டு வரும், ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை தலைவர், நிரித்ய கோபால் தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:நேபாள பிரதமர், ராமர் பெயரை, பிராந்திய அரசியலில் இழுக்கக் கூடாது. சக்ரவர்த்தி ராமரின் ராஜ்யத்தில், நேபாளும் அடங்கியிருந்தது. அதனால், இந்தியா - நேபாள உறவு, வரலாற்றுக்கு முந்தையது. ஆண்டுதோறும், ராமரின் திருக்கல்யாண விழாவையொட்டி, அயோத்தியில் இருந்து, நேபாளத்தின் ஜனக்பூருக்கு பிரமாண்ட ஊர்வலம் நடத்தப்படுகிறது. சர்மா ஒலி பேசியது, துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

விஷ்வ இந்து பரிஷத் செய்தி தொடர்பாளர், ஷரத் ஷர்மா கூறியதாவது: சர்மா ஒலி, சீனாவின் துாண்டுதலால் ஆதாரமின்றி, அபத்தமாக பேசிஉள்ளார். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்பதற்கு, ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.''உள்நாட்டில், தன் பதவிக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தில் இருந்து, மக்களை திசை திருப்பவே, சர்மா ஒலி, ராமரை வம்புக்கிழுத்துள்ளார்,'' என, அயோத்தி அனுமன் கோவில் பூசாரி, ராஜுதாஸ் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
16-ஜூலை-202016:01:52 IST Report Abuse
Balasubramanian Ramanathan இங்கே நாங்க தமிழை வச்சு அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கோம். எங்க மடியில் கைய வெச்சிடாதீங்க ஐயா
Rate this:
Cancel
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
16-ஜூலை-202014:30:36 IST Report Abuse
வல்வில் ஓரி அரசியலுக்காக ராமரை இழுக்க வேண்டாம்:: ஏன் எனில் இதை வைத்து தான் நாங்கள் பிழைப்பை ஒடி கொண்டு இருக்கிறோம் கடந்த 50 வருடங்கல இப்போ நடுவில் நீங்கள் வந்து சன்மானம் பெற்று கொள்ளவேண்டாம்
Rate this:
Cancel
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
16-ஜூலை-202014:28:46 IST Report Abuse
வல்வில் ஓரி அமித் ஷா மகன் ஜெய் ஷா, யஸ்வந்த் சின்ஹா மகன் ஜெயந்த் சின்ஹா, பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன், வசுந்தராஜே மகன் துஷ்யந்த் சிங், கல்யாண் சிங் மகன் ராஜபீர் சிங்,சட்டிஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் அபிஷேக் சிங், டெல்லி முன்னாள் முதல்வர் எஸ் எஸ் வர்மா மகன் பர்வேஷ் வர்மா இவர்களெல்லாம் யார்? யாருக்கும் ஒன்றும் தெரியாது என நினைத்து பிஜேபியினர் கதையளப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X