அரசியல் செய்தி

தமிழ்நாடு

நவம்பரில் ரஜினியின் புதிய கட்சி?

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (73)
Share
Advertisement
Rajini, Rajinikanth, politics, ரஜினி, ரஜினிகாந்த், அரசியல், கட்சி

சென்னை : ''வரும் நவம்பரில், தன் கட்சி பெயரை, ரஜினி அறிவிப்பார்,'' என, அவரது ஆதரவாளரும், முன்னாள் துணை மேயருமான, 'கராத்தே' தியாகராஜன் கூறியுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த, நடிகர் ரஜினி, தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப, கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அதன் முதல் கட்டப் பணியாக, ரஜினி மக்கள் மன்றத்தை ஏற்படுத்தி, நிர்வாகிகளை நியமித்து, உறுப்பினர் சேர்க்கையை துவக்கினார்.

ஆனால், கொரோனாவுக்கு முன், ரஜினி அளித்த பேட்டியில், 'நான் கட்சி ஆரம்பித்தாலும், முதல்வராக மாட்டேன். ஊழலை விரும்பாத மக்கள், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினால் மட்டுமே, நான் கட்சி ஆரம்பிப்பேன். 'அத்தகைய எழுச்சி, மக்களிடம் ஏற்பட வேண்டும். அது, எனக்கு தெரிய வேண்டும்' என்றார்.

இதனால், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா என்பது சந்தேகமானது. இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், முன்னாள் துணை மேயருமான, 'கராத்தே' தியாகராஜன், சென்னையில் நேற்று கூறியதாவது: கொரோனா வைரஸ் காரணமாக, ஆகஸ்டில், ரஜினி கட்சி ஆரம்பிக்க மாட்டார். வரும் நவம்பரில், அவர் கட்சியை அறிவிப்பார்.

ஸ்டாலினின், 'ஒன்றிணைவோம் வா' திட்டம் மக்களை சென்றடையவில்லை. ஆனால், ரஜினியின், 'சும்மா விடக் கூடாது' என்ற ஒரு வார்த்தை, உலகளவில் சென்றுள்ளது. ரஜினி, நிச்சயம் கட்சி ஆரம்பிக்க மாட்டார் என, பலரும் எண்ணியுள்ளனர். 'காங்கிரஸ், மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகளோடு கூட்டணி வைப்பார்' என்றும் சிலர் சொல்கின்றனர்.

ஆனால், அவர் கட்சி ஆரம்பிப்பது உறுதி. அது, கொரோனாவால், இரண்டு மாதம் தள்ளிப் போயுள்ளது. மாநாடு கூட்டி, கட்சி ஆரம்பிக்க வேண்டும் என, நினைத்தார். ஆனால், கொரோனாவால் தடைபட்டுள்ளது. 'ஆன்லைன்' வாயிலாக, கோடிக்கணக்கான மக்கள் மத்தியில், ரஜினி, கட்சியை பிரகடனப்படுத்துவார். அவர் அரசியலுக்கு வந்த பின் தான், கூட்டணி குறித்து பேச முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (73)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Covaxin - Bharat Hindustan,இந்தியா
18-ஜூலை-202017:22:17 IST Report Abuse
Covaxin நோகாம நுங்கு தின்ன ஆசைப்பட்டானாம்... அது வேறு யார்.... ரஜினிகாந்த் தான்...
Rate this:
Cancel
R.Selvaperumal - kuwait,குவைத்
18-ஜூலை-202011:42:02 IST Report Abuse
R.Selvaperumal இங்கு ரஜினியை அவருடைய பவரை குறைத்து மதிப்பிடுபவர்களின் கவனத்திற்கு, இன்றைய தினம் எத்தனையோ செய்திகள் தினமலரில் வெளிவந்துள்ளது. அவற்றின் கமெண்ட் எண்ணிக்கை சொற்ப அளவில் மட்டுமே. ஆனால் ரஜினி பற்றிய செய்தி என்றவுடன் இதனுடைய கமெண்ட் எண்ணிக்கை எவ்வளவு என்று பாருங்கள். இத்தனைக்கும் இந்த செய்தி ரஜினியை பற்றி கராத்தே தியாகராஜன் கருத்து. இதிலிருந்து ரஜினி பவர் புரிந்து கொள்ளலாம். ரஜினி ஓர் ஆண்மீகவாதி. ரஜினி பார்க்காத பணமா? புகழா? அந்தஸ்தா? இப்போது அவர் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுவது இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை சீரழித்த திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து மக்களை காக்க மட்டுமே. இறுதியாக, தமிழகத்தில் அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லை. எவ்வளவு சரியான வரிகள். தமிழக மக்களே நம் தலையெழுத்து நம் கையில்.. சிந்திப்போம்.
Rate this:
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
17-ஜூலை-202013:21:13 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao எந்த நவம்பரில்? அடுத்த நுற்றாண்டிலா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X