ஊழியருக்கு கொரோனா : மேற்குவங்க சட்டசபை மூடல்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020
Share
Advertisement
Bengal Assembly, coronavirus, covid 19, west bengal, ஊழியர் கொரோனா : மேற்குவங்க சட்டசபை மூடல்

கோல்கட்டா: மேற்குவங்க மாநில சட்டசபை ஊழியர்கள் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து சட்டசபை மூடப்பட்டது.

மேற்குவங்க மாநிலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 34,427 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுளளனர். பலி எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது.
இந்நிலையில் நேற்று சட்டசபை ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதியானது.


latest tamil news



இது தொடர்பாக சட்டசபை சபாநாயகர் பீமன் பந்தோபாத்தியாயா சட்டசபை தட்டச்சு ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அவருடன் தொடர்பில் இருந்த 22 பேர் வீட்டில் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஜூலை 27-ம் தேதி வரை 10 நாட்கள் சட்டசபையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதுவரை எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளும் நடைபெறாது. இவ்வாறு சபாநாயகர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X