காங்கிரஸ் கட்சியில் வலுக்கிறது எதிர்ப்பு

Updated : ஜூலை 17, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
sanjay jha, Congress, Sonia, Rahul, சஞ்சய் ஜா, காங்கிரஸ்

புதுடில்லி : '' நான், தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ விசுவாசமாக இருக்கத் தேவையில்லை; காங்கிரசின் சித்தாந்தங்களுக்குத் தான், எப்போதும் விசுவாச மாக இருப்பேன்,'' என, காங்கிரசிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட சஞ்சய் ஜா கூறியுள்ளார். இதையடுத்து, காங்., கட்சியில் எதிர்ப்பு வலுக்கிறது.


விமர்சனம்


மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர், சஞ்சய் ஜா. தொழிலதிபரான இவர், காங்கிரஸ் கட்சியில், மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தார்.கடந்த மாதம், கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்து, ஆங்கில நாளேடு ஒன்றில், சஞ்சய் ஜா கட்டுரை எழுதியிருந்தார். இதையடுத்து, கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா, அவரை தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கினார்.

இதன்பின், சஞ்சய் ஜா, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், காங்கிரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.இதற்கிடையே, ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக, துணை முதல்வராகவும், மாநில காங்கிரஸ் தலைவராகவும் இருந்த சச்சின் பைலட், போர்க் கொடி துாக்கினார். இதையடுத்து, இரண்டு பதவிகளில் இருந்தும், அவர், நேற்று முன்தினம் நீக்கப்பட்டார்.இதை, சஞ்சய் ஜா, டுவிட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தார். 'நேற்று சிந்தியா; இன்று பைலட்; நாளை யார்' என, கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், 'சச்சின் பைலட், ஐந்து ஆண்டுகளாக, தன் வியர்வை, ரத்தம், கண்ணீர், உழைப்பு அனைத்தையும், ராஜஸ்தானில், காங்கிரஸ் வளர்ச்சிக்காக செலவழித்தார். 'அதனால் தான், 2013ல், 23 இடங்களில் வென்ற காங்கிரஸ், 2018ல், 100 இடங்களில் வென்றது. இதற்காக, சச்சின் பைலட்டுக்கு, கட்சி சிறந்த பரிசு அளித்துள்ளது' எனக் கூறியிருந்தார். இது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, 'சஞ்சய் ஜா, தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால், அவர், காங்கிரசிலிருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்' என, மஹாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட், நேற்று முன்தினம் இரவு அறிவித்தார்.


சகிப்பின்மை:

இந்நிலையில், டுவிட்டரில், சஞ்சய் ஜா நேற்று கூறியிருந்ததாவது: கட்சிக்கு எதிராக நான் என்ன செய்தேன் எனத் தெரியவில்லை.காங்கிரஸ் தலைமை, என்னிடம், நான் செய்த தவறுகளை கூறி, அதனால், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கலாம். கட்சியின் விதிமுறைகளை, கட்சியே மீறுகிறது. நாம், சகிப்பின்மை கலாசாரத்தை வெளிப்படுத்தி வருகிறோம். நான் தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ விசுவாசமாக இருக்க தேவையில்லை. காங்கிரஸ் சித்தாந்தங்களுக்கு மட்டுமே, எப்போதும் விசுவாசமாக இருந்து வருகிறேன்.

காந்தி- - நேரு சித்தாந்தவாதியாக இருக்கிறேன். ஆனால் காங்கிரசில், அந்த சித்தாந்தம் காணாமல் போய்விட்டது.நான், உட்கட்சி ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்தது தவறு என்றால், அதைத் தொடர்ந்து செய்வேன். கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பில் இருக்கும் பிரச்னைகளைத் தொடர்ந்து எழுப்புவேன். என்னுடைய இந்தப் போர், ஒரு துவக்கம் தான். இவ்வாறு, சஞ்சய் ஜா கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜூலை-202020:07:11 IST Report Abuse
Endrum Indian "நான், தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ விசுவாசமாக இருக்கத் தேவையில்லை" சஞ்சய் ஜா . அப்படி கிஞ்சித்தளவேனும் உன் மனதில் எண்ணமிருந்திருந்தால் எப்போதோ நீ முஸ்லீம் நேரு இத்தாலிய சோனியா காங்கிரசிலிருந்து விலகியிருப்பாய், சும்மா சப்பை கட்டு கட்டி கதை விடாதே.
Rate this:
Cancel
Gandhi - Chennai,இந்தியா
16-ஜூலை-202017:26:59 IST Report Abuse
Gandhi காங்கிரஸ் சித்தாந்தங்கள் ரெண்டுதான் 1. ஆயுதப்பேர ஊழல் செய்வது 2. லண்டனில் வீடு வாங்குவது. இந்திய ராணுவ வீரர்கள் அப்பாவிகள் 70 வருடங்களுக்கு மேலாக குண்டுதுளைக்காத ஹெல்மெட் - ஜாக்கெட் இல்லாம தான் பாகிஸ்தானிகளையும் சீனர்களையும் சமாளித்திருக்கிறார்கள். பிரதமர் மோடி விரைவில் இந்திய ராணுவ வீரர்களுக்கு குண்டுதுளைக்காத ஹெல்மெட் - ஜாக்கெட் வழங்க ஈசன் அருள்புரியட்டும்
Rate this:
Cancel
Amirthalingam Shanmugam - Trichy,இந்தியா
16-ஜூலை-202016:55:23 IST Report Abuse
Amirthalingam Shanmugam நான் தனி மனிதருக்கோ அல்லது ஒரு குடும்பத்துக்கோ விசுவாசமாக இருக்க தேவையில்லை. காங்கிரஸ் சித்தாந்தங்களுக்கு மட்டுமே, எப்போதும் விசுவாசமாக இருந்து வருகிறேன்.அந்த சித்தாந்தங்களை கொஞ்சம் அவிழ்த்துவிடுங்க சாமி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X