பிளாஸ்மா தானம் செய்தால் ரூ. 5000 பரிசு: கர்நாடகா அமைச்சர் அறிவிப்பு

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பெங்களூரு: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 'பிளாஸ்மா திரவியம்' வழங்கினால் ரூ. 5000 வெகுமதி அளிக்கப்படும் என கர்நாடக அமைச்சர் அறிவித்துள்ளார்.கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்திலிருந்து, 'பிளாஸ்மா'வை பிரித்தெடுத்து,நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனாவின் தொற்று நாளுக்கு
Karnataka, coronavirus, covid 19, plasma donation

பெங்களூரு: கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு 'பிளாஸ்மா திரவியம்' வழங்கினால் ரூ. 5000 வெகுமதி அளிக்கப்படும் என கர்நாடக அமைச்சர் அறிவித்துள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்திலிருந்து, 'பிளாஸ்மா'வை பிரித்தெடுத்து,நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது. கர்நாடகத்தில் கொரோனாவின் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த, மாநிலம் முழுவதும் ஆறு மாவட்டங்களில் முழு ஊரடங்கும், பல பகுதிகளில் பாதி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு வருகிறது.


latest tamil news
இந்நிலையில், நேற்று ஒரே நாளில், 3,176 பேர் பாதிக்கப்பட்டனர். ஒரே நாளில், 87 பேர் இறந்தனர். இது தொடர்பாக, மாநில மருத்துவ கல்வி துறை அமைச்சர் சுதாகர், முகநுால் மூலம், பெங்களூரில் அளித்த பேட்டி:கர்நாடகத்தில், ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவுக்கு, 3,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர். இதில், பெங்களூரில் மட்டுமே 1,975 பேர் அடங்குவர். தொற்று பரவாமல் தடுக்க, அரசு தரப்பில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று வரை மாநிலம் முழுவதும், 17 ஆயிரத்து, 370 பேர் பூரண குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இத்தகைய, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வரும் மற்றவர்களுக்கு, 'பிளாஸ்மா திரவியம்' வழங்கி, அவர்கள் குணமடைய உதவ வேண்டும்.பிளாஸ்மா திரவியம் வழங்குபவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் அரசு தரப்பில் ஊக்கத்தொகை வழங்கப்படும். பெங்களூரில் அனைத்து பூத்களிலும் கொரோனா பரவலை தடுக்க, பூத் அதிகாரிகளும், செயல்படைகளும் இரண்டு நாட்களில் அமைக்கப்படும். அவர்கள் பணியாற்றும் முறை குறித்து, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
16-ஜூலை-202008:11:42 IST Report Abuse
Natarajan Ramanathan எப்படி எல்லாம் சம்பாதிக்க வாய்ப்பு கிடைக்கிறது
Rate this:
Cancel
susainathan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-202007:29:00 IST Report Abuse
susainathan plasma value doesnt know about this uneducated peoples
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X