பொது செய்தி

இந்தியா

ரூ.300 கோடி அவசர கொள்முதல்: முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : அவசர தேவைக்கு, 300 கோடி ரூபாய் வரை, போர் ஆயுதங்களை கொள்முதல் செய்ய, ராணுவ அமைச்சகம், முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கியுள்ளது.டில்லியில், நேற்று, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அவசர தேவைகளை சமாளிக்க, 300 கோடி வரை போர் ஆயுதங்கள், இயந்திர தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்க, முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம்
Indian armed forces, india China border row, ladakh border row, அவசர கொள்முதல், முப்படை, சிறப்பு அதிகாரம்

புதுடில்லி : அவசர தேவைக்கு, 300 கோடி ரூபாய் வரை, போர் ஆயுதங்களை கொள்முதல் செய்ய, ராணுவ அமைச்சகம், முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்கியுள்ளது.

டில்லியில், நேற்று, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் தலைமையில், ராணுவ கொள்முதல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில், அவசர தேவைகளை சமாளிக்க, 300 கோடி வரை போர் ஆயுதங்கள், இயந்திர தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்க, முப்படைகளுக்கு சிறப்பு அதிகாரம் வழங்க, ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து, ராணுவ அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: லடாக்கில் சீனாவின் அத்துமீறல் பிரச்னையை தொடர்ந்து, எல்லையில், முப்படைகளையும் தயார் நிலையில் வைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வடக்கு எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்யவும், இதர எல்லை பகுதிகளில், கண்காணிப்பை பலப்படுத்துவது குறித்தும் ஆராய, ராணுவ கொள்முதல் குழுவின் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.


latest tamil news


இதில், தரைப்படை, கடற்படை, விமானப் படை ஆகியவை, அவசர தேவைக்கான இயந்திரங்கள், போர் ஆயுதங்கள் ஆகியவற்றை, வாங்க, சிறப்பு அதிகாரம் அளிக்கப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு படையும், ஒரு திட்டத்தின் கீழ், 300 கோடி ரூபாய் வரை, கொள்முதல் செய்யலாம்.இதுபோல, ஒவ்வொரு திட்டத்திற்கும் போர் தளவாடங்கள் உள்ளிட்டவற்றை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தாமதமின்றி, ஆறு மாதங்களில், கொள்முதல் தொடர்பாக முடிவெடுத்து, ஓராண்டுக்குள் ஆயுதங்களை தருவிக்க வழி ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vnatarajan - chennai,இந்தியா
16-ஜூலை-202013:05:48 IST Report Abuse
vnatarajan டு லேட் இந்த பவரை ராணுவத்தலைமைக்கு எப்போதோ வழங்கியிருக்கவேண்டும்
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-202002:32:06 IST Report Abuse
தல புராணம் ஒரு திட்டத்தின் கீழ், 300 கோடி ரூபாய் வரை, கொள்முதல் செய்யலாம். - எல்லா மேஜர்களும் ஹேப்பி அண்ணாச்சி.. கமிஷனை நேராக பாஜக தேர்தல் நிதி பத்திரங்களாக தரலாம்.
Rate this:
RajanRajan - kerala,இந்தியா
16-ஜூலை-202006:28:59 IST Report Abuse
RajanRajanசர்வாதிகாரம் என்பது ஒரே ஒரு அயோக்கியனை சமாளிப்பது ....ஜனநாயகம் என்பது ஒவ்வொரு அயோக்கியனையும் சமாளிப்பது......கவிஞர் கண்ணதாசனின் காலத்தால் அழியாத என்னே ஒரு திவ்வியமான கணிப்பு. எனவே ஜனநாயகத்தை கட்டிக்காக்க மக்கள் தான் படித்து திருந்த வேண்டும். வாழ்த்துக்கள்....
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-202018:30:52 IST Report Abuse
தல புராணம்Very well said....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X