பொது செய்தி

இந்தியா

தேர்தல் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்கிறார் லவாசா

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி: தேர்தல் கமிஷனர் பதவியை, அசோக் லவாசா ராஜினாமா செய்து விட்டு, ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.



latest tamil news


நாட்டின்,தேர்தல் கமிஷனராக, அசோக் லவாசா, 63, ஜனவரி, 2018ல் நியமிக்கப்பட்டார். தலைமை தேர்தல் கமிஷனர், சுனில் அரோரா, அடுத்த ஆண்டு ஏப்ரலில் ஓய்வு பெற உள்ளார்.அவருக்கு பின், தலைமை தேர்தல் கமிஷனராக லவாசா, 2022 அக்டோபர் மாதம் வரை இருப்பார் என, எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணைத் தலைவராக உள்ள திவாகர் குப்தா, அடுத்த மாதம், 31ம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார்.இதையடுத்து, ஆசிய மேம்பாட்டு வங்கியின் துணை தலைவராக, அசோக் லவாசா பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், தேர்தல் கமிஷனர் பதவியை ராஜினாமா செய்ய, லவாசா முடிவு செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.


latest tamil news



கடந்த லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக கூறப்பட்ட புகாரில், பிரதமர் மோடி, அப்போதைய, பா.ஜ., தலைவர் அமித் ஷா ஆகியோருக்கு நன்னடத்தை சான்றிதழ் வழங்குவதில், தலைமை தேர்தல் கமிஷனர் அரோராவுடன், அசோக் லவாசாவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ஆசிய மேம்பாட்டு வங்கி செயல்பட்டு வருகிறது.இதன் துணை தலைவர்பதவி காலம், மூன்று ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூலை-202009:57:02 IST Report Abuse
Lion Drsekar வயதோ 63 ஐம்பது வயதில் இருப்பவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே? வாழ்நாளில் கடைசி வரை இவர்கள் மக்களை சந்திக்க ஒரு வாய்ப்பே இல்லாமல் போகுமே, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X