செயலியை நீக்கு அல்லது பதவி விலகு: ராணுவ அதிகாரி மீது ஐகோர்ட் காட்டம்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
Delhi High Court, army, ban facebook, court news, செயலியை நீக்கு அல்லது பதவி விலகு: ராணுவ அதிகாரி மீது ஐகோர்ட் காட்டம்

புதுடில்லி : மொபைல் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, ராணுவ அதிகாரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'பேஸ்புக் செயலியை நீக்குங்கள்; அல்லது ராணுவத்தை விட்டு விலகுங்கள்' என காட்டமாக கூறியுள்ளது. சமீபத்தில், 'பேஸ்புக், இன்ஸ்டாகிராம்' உள்ளிட்ட, 89 மொபைல் செயலிகளை பயன்படுத்த, ராணுவ வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, லெப்டினன்ட் கர்னல், பி.கே.சவுத்ரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தாக்கல் செய்தார்.


latest tamil news




அதில், 'என்னைப் போன்ற ராணுவ வீரர்களுக்கு, தங்கள் குடும்பத்தினருடன் தகவல்களை பரிமாறிக்கொள்ள, பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் உதவியாக உள்ளன. 'எனவே, அதற்கு தடை விதிப்பது, வீரர்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் செயல்' என, கூறியிருந்தார். இந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜிவ் சஹாய், ஆஷா மேனன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா கூறுகையில், “வாட்ஸ் ஆப், ஸ்கைப், டுவிட்டர், போன்ற மொபைல் செயலிகளுக்கு, தடை விதிக்கவில்லை.அவற்றின்மூலம், ராணுவ வீரர்கள், தங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கலாம்,” என்றார்.இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது:இந்த விஷயம், நாட்டின் பாதுகாப்புடன் சம்மந்தப்பட்டது.

நீங்கள் நாட்டின் ஒரு முக்கிய அமைப்பின் அங்கமாக விளங்குகிறீர்கள். ஆகையால், அவர்கள் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்கவேண்டும். நீங்கள், பேஸ்புக் மீது மிகவும் அக்கறை உள்ளவராக இருந்தால், ராணுவத்தில் இருந்து விலகிவிடுங்கள். ராணுவத்தில் தொடர்ந்து பணியாற்றலாமா, வேண்டாமா என்பதை, நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். இந்த மனுவை விசாரிப்பதற்கு, எந்த வலுவான காரணமும் இல்லை. இந்த கொள்கை முடிவு குறித்தும், இந்த முடிவு எடுத்ததற்கான காரணங்களையும், மத்திய அரசு சீலிட்ட உறையில் வைத்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதையடுத்து, இந்த விசாரணையை, உயர் நீதிமன்றம் ஜூலை, 21க்கு ஒத்திவைத்தது.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
17-ஜூலை-202017:29:00 IST Report Abuse
Krishnamurthy Venkatesan ராணுவ வீரர்களுக்கென்று ஒரு தனி செயலியை உருவாக்குங்கள்.
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
16-ஜூலை-202015:07:36 IST Report Abuse
skv srinivasankrishnaveni அந்தகாலத்துலே செல்போன் எலாமவரதுக்குமுன்னாடி அவர்கள் ஆர்மிலே ஏர்போர்ஸ்லே நேவிய லே இருந்த அடிமட்டம் ஜவான்கள் போஸ்ட்கார்டுலெந்தான் தங்கள் நலம் கூறுவாங்க ஜவான்கள் எண்ணிக்கை அதிகம் என்பது உலகம் அறிந்த உண்மைதானே ஆபீஸருங்க NIளைமைவேறு ஆனால் ஜவான்கள் பாவம் தம் தந்தை தாய் மனைவிபிள்ளைகள் என்று காண்டெக்ட் இல்லாமல் வந்தகாலம் அது பல ஆபீஸருங்களின் வீடுகளில் ந்த மாதிரி (அதிகம் படிக்காத ஜவான்கல் எல்லாம் )அந்தமாதிரி அடிமட்ட உழைப்பாளிகளை ஆடர்லியாக யாகவே வேலை செய்துண்டுருப்பாங்க இதுவுமுண்மை , . இந்தக்கைப்பேசி வந்தபிறகு பலருக்கும் தம் குடும்பங்களோடு ஒரு தொடர்புக்கு உதவுகிறது என்பதும் உண்மையைத்தான் கம்பியூட்டர் படிச்ச பசங்கள் முக நூல் போன்றவைகள் யூஸ் பண்ணுறாங்க தீயசக்திக்கும் பயன்படுத்து என்னும் பொது பெரிய அதிகாரிகள் தான் முடிவு செய்யவேண்டும் , இன்று சிறைகளிலே இருக்கு கொலைகாரன் லெந்து பிக்பாக்கெட்டவரை செல்லபோன் வச்சுண்டு வீட்டோடு ம் தன்கூட்டுகளவாணிகளோடும் தொடர்புளிருக்கானுகலாம் அப்படி இருக்க நாட்டு எல்லையேயிலே கொட்டும் பனி குளிருளே நாடடைக்காக்கும் ஜாவானகளுக்கு மார்புப்பது தப்புதான் முதல்ல அவாளும் மனுஷாலேதான் என்பதை யோசிக்கவேண்டும் இவ்ளோ சொல்றேனே எனக்கு செல்போன் எல்லாம் யூஸ் பண்ணவே தெரியாது என்னிடமோ என்கணவர்தமும் இந்தகுப்பை இல்லீங்களே நான் 80 அவர் 88 வயசுலே இருக்கோம் அவர் BSNL லேதான் வேலை செய்து பணிஓய்வும் பெற்றவர் இன்னிவரை கைபேசி யூஸ் பன்னதே இல்லீங்க என்மகளிடம் இருக்கு லேந்து லைன் வேலை செய்யலேன்னா அவளுக்கு என் மகன் போன் செய்துகூப்பிடுவான் அவள் போன்லெ கால்வரைச்சபேசுவோம் அவ்ளோதான்
Rate this:
Cancel
Vivekanandan Mahalingam - chennai,இந்தியா
16-ஜூலை-202012:55:03 IST Report Abuse
Vivekanandan Mahalingam முதலல்ல தேசத்துக்கு எதிராக கருது போடுபவர்களை NIA கவனிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X