அமெரிக்காவில் பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்:

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
Joe Biden, Elon Musk, Bill Gates, Bitcoin Scam,
 அமெரிக்கா, பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள்  முடக்கம்:

வாஷிங்டன்: பிட்காயின் பரிவர்த்தனைக்காக அமெரிக்காவில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டுவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக,பிட்காயின் எனப்படும் 'டிஜிட்டல் கரன்சி' அல்லது, 'கிரிப்டோ கரன்சி' எனும், கணினி வழி பணப் பரிவர்த்தனை பிரபலம் அடைந்து வருகிறது. இத்தகைய டிஜிட்டல் நாணயங்களுகென தனி மையங்கள், உலகம் முழுவதும் இயங்குகின்றன. கறுப்பு பணம் வைத்துள்ளவர்கள், தாவூத் இப்ராகிம் போன்ற பயங்கரவாதிகளும், பிட் காயின் பரிவர்த்தனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.


latest tamil newsஇந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் அடுத்த அதிபராக வருவார் என நம்பப்படும் ஜோபைடன், தொழிலதிபர்கள், எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள் நேற்று ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில் பிட்காயின் பரிவர்த்தனை செய்யும் கும்பலுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது.

இவர்களை தவிர முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஆப்பிள், உபேர் ஆகிய நிறுவனங்களின் டுவிட்டர் கணக்குகளும், , ஹேக் செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிட்காயின் பரிவர்த்தனை செய்யும் கும்பல் சமூக வலைதளமான டுவிட்டர் கணக்கிற்குள் எப்படி புகுந்தது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி வருவதாக டுவிட்டர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது போன்ற ஒரு நிகழ்வு மிகப்பெரிய விதிமீறல் நடந்துள்ளதாக கண்டனம் எழுந்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூலை-202008:36:14 IST Report Abuse
Lion Drsekar எல்லா இடங்களிலும் மக்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட பிரநிதிகள் எங்கு பேசவேண்டுமோ அங்கு பேசுவதில்லை, சிறையில் இருந்தாலும் இந்த ட்விட்டர் தான் ஆகவே நல்லதுதான், அப்போதுதான் இவர்களுக்கு மக்களின் பிரநிதிகள் மக்கள் வரிப்பணத்தில் வாழ்கிறோம், நேரில் சென்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று தோன்றும், வந்தே மாதரம்
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
16-ஜூலை-202014:54:51 IST Report Abuse
VELAN Ssariyaa...
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஜூலை-202016:00:00 IST Report Abuse
தமிழ்வேல் எங்களுக்கு நிருபர்கள், பத்திரிகை, பாமரன், ஏழை புலம் பெயர் தொழிலாளர்கள் னு சொன்னாலே அலர்ஜி சார்....
Rate this:
Cancel
தியாகி சுடலை மன்றம் முதல்ல சுடலையோட twitter கணக்க முடக்குங்க. 350 கோடி சம்பளம் கொடுத்து twitterல post போடுவதற்காக ஒருவனை வச்சிகிட்டு இருக்கார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X