நான் ரிமோட் கண்ட்ரோல் அல்ல:சாம்னாவில் முதன்முறையாக பவார் பேட்டி

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

மும்பை: சிவசேனா கட்சியின் ஆதரவு பத்திரிகையான சாம்னாவில் முதன்முறையாக மாற்று கட்சி தலைவரின் பேட்டி இடம் பெற்றுள்ளது.

இது குறித்து கூறப்படுவதாவது: மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா கட்சியின் ஆதரவு பத்திரிகையாக வெளிவருவது சாம்னா பத்திரிகை. கடந்த காலங்களில் பா.ஜ.,வுடன் கூட்டணியின் போதும், கூட்டணி அல்லாத போதும் சிவசேனாவின் கருத்துக்களே அதில் இடம்பெற்றிருக்கும்.latest tamil newsதற்போது அத்தகைய நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சாம்னா பத்திரிகையில் முதன் முறையாக மாற்று கட்சி தலைவரின் பேட்டி இடம் பெற்றிருக்கிறது. அந்த தலைவர் வேறு யாரும் அல்ல தற்போதைய மகா.,அரசின் ரிமோட் கன்ட்ரோல் என கூறப்படுபவரான சரத்பவார் தான் அவர்.

முன்னாள் மத்திய அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சரத்பவாரை சாம்னா பேட்டி கண்டது. பேட்டியின் போது சரத்பவார் கூறியதாக பத்திரிகை தெரிவித்து இருப்பதாவது: முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. லாக்டவுன் குறித்து வணிகமற்றும் வர்த்தகர்களின் கருத்துக்கள்முதல்வரிடம் கொண்டு செல்லப்பட்டது.

விரைவில் பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிட்டால் நாட்டில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், பொருளாதார நடவடிக்கைகள் இல்லாததால் ஏற்படும் பாதிப்பு கோவட் -19 பாதிப்பை விட பலமடங்காக இருக்கும் . டில்லி, கர்நாடகா போன்ற மாநிலங்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்வுகளை நீக்கி உள்ளததையும் முதல்வரிடம் எடுத்து கூறப்பட்டதாக சாம்னா தெரிவித்துள்ளது.


latest tamil newsகாங்., தேசியவாத காங்கிரஸ் சிவசேனா இணைந்த கூட்டணியான மகா விகாஸ் அகாதியை ரிமோட் கண்ட்ரோல் போல் கட்டுப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள சரத்பவார் ஜனநாயகத்தில் தூர கட்டுப்பாடுகளுடன் அரசாங்கம் இயங்காது என பவார் கூறியதாக சாம்னா தெரிவித்து உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri Ra - Chennnai,இந்தியா
16-ஜூலை-202011:28:35 IST Report Abuse
Sri Ra ஆமாம் நான் தான் ஒரிஜினல் கன்றோல்
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-ஜூலை-202010:44:59 IST Report Abuse
vbs manian யாருமே நம்ப மாட்டார்கள்
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-202007:43:17 IST Report Abuse
 rajan Sarad.pawar ஒரு பகாசுரன் . பண மழையில் குளித்துக்கொண்டே இருக்க வேண்டும். ரொம்ப வருடங்களுக்கு பிறகு மறுபடியும் காசு பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எந்தெந்த வழிகளில் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்க வேண்டும் என்று அவருக்கு தெரியும். ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த முதல்வர். இப்போது மறைமுக ஆட்சி செய்து கொள்ளை அடிக்கிறார். உத்தவ் தாக்கரேவுக்கும் அந்த கலையை கற்றுக் கொடுத்துக் கொண்டுள்ளார். உத்தவ் இவ்வளவு பணத்தை பார்த்து தேன் குடித்த நரி போல் உள்ளார். மொத்தத்தில் எல்லாரும் திருடர்கள். ஆட்சி முறை மாற வேண்டும். MLA MP SYSTEM ஒழிய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X