பொது செய்தி

இந்தியா

‛ஏர்-இந்தியா' அலுவலகங்கள் ஜூலை 20 முதல் செயல்படும்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி : ஜூலை 20 முதல் 'ஏர் - இந்தியா' நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களும் நாடு முழுவதும் செயல்பட துவங்கும்' என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.



latest tamil news




'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் முதல் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் தற்போது படிப்படியாக இயங்க துவங்கி உள்ளன.விமான சேவை நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை வைத்து செயல்பட்டு வந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள ஏர் - இந்தியா அலுவலகங்கள் ஜூலை 20 முதல் முழுவீச்சில் செயல்பட துவங்கும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.அலுவலகங்களுக்கு வராதவர்கள் விடுப்புக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


latest tamil news



தடை செய்யப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு மட்டும் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே ஏர் -- இந்தியாவின் நிரந்தர ஊழியர்களுக்கு செயல் திறன், உடல் நலன் உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை ஊதியமில்லா கட்டாய விடுப்பு வழங்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Kumaresan - T.Rajagopalanpatti,இந்தியா
16-ஜூலை-202010:17:02 IST Report Abuse
R.Kumaresan தமிழ்நாட்டில் பேருந்து விமான சேவை செய்வதால் வைரஸ் நோய் பரவல் நிற்பதாகத்தெரியவில்லை. தமிழ்நாட்டில் வைரஸ் நோய் பரவல் நிறைய பலியாயியுள்ளனர் அதிகம்தான்..
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூலை-202008:34:44 IST Report Abuse
Lion Drsekar அலுவலகங்கள் செயல்படும் விமானம், ? வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X