ராஜஸ்தான் அரசியலில் தொடரும் குழப்பம் : 19 எம்.எல்.ஏ.,க்களுக்கு சபாநாயகர், 'நோட்டீஸ்':

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
rajasthan, rajasthan politics, sachin pilot


ஜெய்ப்பூர், :துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட சச்சின் பைலட்டுக்கும்,அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருக்கும், தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு, ராஜஸ்தான் சட்டசபை சபாநாயர், சி.பி.ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.

ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட், முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினார். தன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டில்லியில் முகாமிட்டுள்ளார்.இதையடுத்து, ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம், முதல்வர், கெலாட், காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, ஜெய்ப்பூரில் உள்ள தன் வீட்டில் கூட்டினார்.இக்கூட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என, கட்சியின் கொறடா, மகேஷ் ஜோஷி உத்தரவிட்டார். ஆனால், சச்சின் பைலட்டும், அவரை ஆதரிக்கும், இரண்டு அமைச்சர்கள் உட்பட, 18 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டத்தை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து, துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும், சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோர் நீக்கப்பட்டனர்.


latest tamil newsஇந்நிலையில், ராஜஸ்தான் சட்டசபை சபாநாயகர், சி.பி.ஜோஷிக்கு, காங்., கட்சியின் கொறடா, மகேஷ் ஜோஷி எழுதிய கடிதத்தில் கூறியிருந்ததாவது:சச்சின் பைலட்டும், அவரை ஆதரிக்கும், 18 எம்.எல்.ஏ.,க்களும், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். மாநில அரசை கவிழ்க்கும் சதிச் செயலில், திட்டமிட்டு ஈடுபட்டுள்ளனர்.எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என, உத்தரவிட்டும், பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களும், கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். ராஜஸ்தான் அரசை கவிழ்க்க, பா.ஜ., பல வழிகளில் முயற்சித்து வருகிறது. இதற்கு, உறுதுணையாக பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும் செயல்பட்டு வருகின்றனர். இதனால், 19 பேரையும், அரசியல் சட்டத்தின், 10வது பிரிவின் கீழ், எம்.எல்.ஏ., பதவியிலிருந்து, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியிருந்தார். இதையடுத்து, சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், 18 பேருக்கும், தகுதி நீக்கம் செய்வது பற்றி விளக்கம் கேட்டு, சபாநாயகர், சி.பி.ஜோஷி, 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளார்.மேலும், நோட்டீசுக்கு நாளைக்குள் பதில் அளிக்க வேண்டும் என, சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.இது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலரும், ராஜஸ்தான் மாநில பொறுப்பாளருமான அவினாஷ் பாண்டே கூறியதாவது: சச்சின் பைலட்டுக்கு, காங்கிரஸ் இன்னும், கதவை மூடவில்லை. அவர், தன் தவறை உணர வேண்டும். பா.ஜ.,வின் வலையில் விழாமல், அவர், மீண்டும் காங்கிரசில் சேர, ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக, கோவிந்த் சிங் தோத்சாரா நேற்று முன்தினம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, கட்சியின் மாவட்ட மற்றும் வட்டார கமிட்டிகள், நேற்று கலைக்கப்பட்டன. 'புதிய கமிட்டிகள் விரைவில் அமைக்கப்படும்' என, கட்சியின் பொதுச் செயலர், அவினாஷ் பாண்டே தெரிவித்தார்.


தகுதி நீக்கம்செய்ய முடியுமா?சச்சின் பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என, சபாநாயகரிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால், தகுதி நீக்கம் செய்ய முடியுமா என்பது, தற்போது விவாதிக்கப்பட்டு வருகிறது.'கட்சியிலிருந்து தானாகவே விலகும் எம்.எல்,ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யலாம்.'சபையில், கட்சியின் கொறடா பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக ஓட்டளித்தாலோ, அல்லது ஓட்டளிப்பை புறக்கணித்தாலோ, அவரை தகுதி நீக்கம் செய்யலாம்' என, தகுதி நீக்கம் தொடர்பாக, அரசியல் சட்டத்தின், 10வது பிரிவு கூறுகிறது.'சபையில் கட்சி உத்தரவை மீறாததால், தங்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது' என, சச்சின் பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள்கூறுகின்றனர்.'கொறடா பிறப்பித்த உத்தரவை மதிக்காமல், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை, பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்துள்ளனர். 'மேலும், கெலாட் அரசு பெரும்பான்மையிழந்து விட்டது.'சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, பைலட்டை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்கள், பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். அதனால், அவர்களை தகுதி நீக்கம் செய்யலாம்' என, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகின்றனர்.'தகுதி நீக்கும் விவகாரத்திலிருந்து, சபாநாயகரை விடுவிக்க வேண்டும். இந்த விவகாரத்தால், சபாநாயகர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க நேருகிறது' என, ராஜஸ்தான் சபாநாயகர், சி.பி ஜோஷி, முன்பு நடந்த சபாநாயகர் மாநாட்டில் கூறியுள்ளார். இப்போது, அவரிடமே, தகுதி நீக்க விவகாரம் வந்துள்ளது.


'பா.ஜ.,வில் இணைய மாட்டேன்'''பா,ஜ.,வில் இணையும் எந்தவொரு திட்டமும், என்னிடம் இல்லை,'' என, சச்சின் பைலட் கூறியுள்ளார். தனியார், 'டிவி' சேனல் ஒன்றுக்கு, அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: நான், பா.ஜ.,வில் இணைய மாட்டேன். என்னை இழிவுப்படுத்தவே, பா.ஜ.,வுடன் தொடர்பு படுத்துகின்றனர். ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெற கடுமையாக உழைத்த நான், சொந்த கட்சிக்கு எதிராகவா செயல்பட போகிறேன். நான் காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன். என் எதிர்கால நடவடிக்கை குறித்து, முடிவு செய்ய வேண்டும். ராஜஸ்தான் மக்களுக்கு சேவையாற்றுவதையே முக்கியமாக கருதுகிறேன். இவ்வாறு, சச்சின் பைலட் கூறினார்.


கெலாட்டுக்கு நுாலிழை பெரும்பான்மை


ராஜஸ்தானில், முதல்வர், அசோக் கெலாட் அரசுக்கு, நுாலிழை பெரும்பான்மை உள்ளது தெரிய வந்துள்ளது.ராஜஸ்தான் சட்டசபையில் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை, 200. இதில், காங்கிரசுக்கு, சபாநாயகர் உட்பட, 107 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மை பலத்துக்கு, 101 உறுப்பினர்கள் தேவை. முதல்வர் கெலாட், நேற்று முன்தினம் கூட்டிய எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், காங்கிரசை சேர்ந்த, 88 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். 10 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள், பாரதிய பழங்குடியின கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றின் தலா, இரண்டு எம்.எல்.ஏ.,க்களும், கூட்டத்தில் பங்கேற்றனர். இதனால், கெலாட் அரசுக்கு, 104 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு இருப்பது உறுதியானது. எனினும், பாரதிய பழங்குடியின கட்சியின் இரண்டு எம்.எம்.ஏ.,க்களும், 'அரசுக்கு ஆதரவு தருவது பற்றி, சரியான நேரத்தில் முடிவு செய்வோம்' என, பின்னர் தெரிவித்தனர். அதனால், சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டால், கெலாட் அரசு, நுாலிழை வித்தியாசத்தில் வெற்றி பெற, அதிக வாய்ப்புகள் உள்ளன.

ஒரு வேளை, பைலட் உட்பட, 19 எம்.எல்.ஏ.,க்களை, சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தால், சட்டசபையின் பலம், 181 ஆக குறைந்து விடும். அப்போது பெரும்பான்மை பலம் பெற, 91 எம்.எல்.ஏ.,க்கள் போதும்.எதிர்கட்சியான பா.ஜ.,வுக்கு, 75 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். பெரும்பான்மை பலம் பெற, 16 எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவை பெறுவது, பா.ஜ.,வுக்கு எளிதல்ல. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தவிர மற்ற எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பா.ஜ.,வை ஆதரித்தால் மட்டுமே, பெரும்பான்மை பலம் பெற முடியும். அதனால், 19 எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், கெலாட் அரசு தப்பித்து விடும் என, தெரிகிறது. ஆனால், கெலாட் ஆதரவு காங்.,- எம்.எல்.ஏ.,க்கள் சிலர், பைலட் பக்கம் தாவினால், நிலைமை மாறிவிடும்.


'குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் பைலட்'''பா.ஜ.,வுடன் சேர்ந்து, சச்சின் பைலட் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார்,'' என, ராஜஸ்தான் முதல்வர், அசோக் கெலாட் தெரிவித்தார்.ஜெய்ப்பூரில் அவர் கூறியதாவது:என் அரசை கவிழ்க்கும் முயற்சிகள், சில காலமாகவே நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில், குதிரை பேரம் செய்யப்பட்டதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது. எம்.எல்.ஏ.,க்களை, 10 நாட்கள் ஓட்டலில் தங்க வைக்காமல் இருந்திருந்தால், தற்போது நடப்பது அன்றே நடந்திருக்கும்.அரசியலில், புதிய தலைமுறையினர், அவர்கள் முறை வரும் வரை பொறுமையாக காத்திருப்பதில்லை. நாங்கள், புதிய தலைமுறையை நேசிக்கிறோம். எதிர்காலம் அவர்களுடையதாக தான் இருக்கும். ஆங்கிலத்தில் சிறப்பாக பேசுவதோ, பார்க்க அழகாக இருப்பதோ, அரசியலுக்கு தேவையில்லை. கட்சியின் கொள்கை, சித்தாந்தம் மீது பற்று, தலைமை மீது நம்பிக்கை, ஆகியவை தான் முக்கியம்.என் ஆட்சியை கவிழ்க்க, பா.ஜ., தொடர்ந்து முயற்சி செய்கிறது. இதற்காக, எம்.எல்.ஏ.,க்களை விலை பேசும், குதிரை பேரத்தில், பா.ஜ., ஈடுபட்டுள்ளது. பா.ஜ.,வுடன், மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.


'ஜெய்ப்பூர் திரும்ப வேண்டும்'காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:ராஜஸ்தான் அரசை கவிழ்க்கும், பா.ஜ.,வின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.,வில் இணைய மாட்டேன் என, சச்சின் பைலட் தெரிவித்துள்ளார்.அப்படியென்றால், ஹரியானா அரசின் பாதுகாப்பிலிருந்து, சச்சின் பைலட் வெளியேற வேண்டும். ஜெய்ப்பூரில் உள்ள தன் வீட்டுக்கு திரும்ப வேண்டும். பா.ஜ.,வுடனான பேச்சை, முற்றிலும் நிறுத்த வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
16-ஜூலை-202014:27:45 IST Report Abuse
வல்வில் ஓரி அமித் ஷா மகன் ஜெய் ஷா, யஸ்வந்த் சின்ஹா மகன் ஜெயந்த் சின்ஹா, பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன், வசுந்தராஜே மகன் துஷ்யந்த் சிங், கல்யாண் சிங் மகன் ராஜபீர் சிங்,சட்டிஸ்கர் முன்னாள் முதல்வர் மகன் அபிஷேக் சிங், டெல்லி முன்னாள் முதல்வர் எஸ் எஸ் வர்மா மகன் பர்வேஷ் வர்மா இவர்களெல்லாம் யார்? யாருக்கும் ஒன்றும் தெரியாது என நினைத்து பிஜேபியினர் கதையளப்பார்கள்.
Rate this:
Cancel
வல்வில் ஓரி - அடுத்தவர் ID திருடும் ,பஞ்சம பரதேசி ,இந்தியா
16-ஜூலை-202013:59:34 IST Report Abuse
வல்வில் ஓரி bjp க்கு தான் பாவம் இலவு காத்த கிளி போல ஆகி விட்டது நல்ல காலம் PMCARE தப்பித்தது
Rate this:
Cancel
Joseph Murugan Abdullah - Tirunelveli,இந்தியா
16-ஜூலை-202013:52:17 IST Report Abuse
Joseph Murugan Abdullah Leaders of some countries make an impression that they are very efficient and leading the country in a developing path. But under their leadership people will suffer from unknown diseases (Corona) and poverty. This is what happening now.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X