போபால்: பா.ஜ, துளசி செடியையும் , காங்.,சிவலிங்கத்தையும் கொடுத்து இந்து முகமூடியுடன் ம.பி.,இடைத்தேர்தலை சந்திக்க இரு பெரும் கட்சிகளும் தயாராகி வருகிறது.

ம.பி., மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் வரையில் காங்., ஆட்சி நடைபெற்றுவந்தது. அதன்பின்னர் அக்கட்சியில் இருந்து ஜோதிர் ஆதித்யா தனது ஆதரவாளர்கள்22 பேருடன் பா.ஜ.,வில் ஐக்கியமானார். இதனையடுத்து காங்., ஆட்சி கவிழ்ந்து பா.ஜ. ஆட்சிநடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாநிலத்தில் 22தொகுதிகள் உட்பட 25 தொகுதிகளுக்கான இடை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முறையான அறவிப்பு தேர்தல் கமிஷன் வெளியிடவில்லை என்ற போதிலும் காங்., பா.ஜ., இரு கட்சிகளும் அதற்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக இடைத் தேர்தல் நடைபெறும் இந்தூர் மாவட்டத்தில் உள்ள சன்வர் தொகுதியை இரு கட்சிகளும் குறிவைத்துள்ளன. தனித்தொகுதியான இத்ததொகுதியின் வாக்காளர்களை கவர்வதற்காக இரு கட்சிகளும் இந்து ஆதரவு என்ற முகமூடியை அணிய துவங்கி உள்ளது.
ஒருபுறம் பா.ஜ.. ஹர்ஹர் மோடி, கர் கர் துளசி என்ற வாசகத்தையும், காங்கிரஸ் ஹர், ஹர் மகாதேவ், கர் கர் மகாதேவ் என்ற வாசகத்தையும் பிரசாரத்திற்கு பயன்படுத் துவங்கி உள்ளனர். இத் தொகுதியின் கடந்த முறை வேட்பாளரான துளசிராம் சிலாவத்( சிந்தியா ஆதரவாளர்) தற்போது அதே தொகுதியில் பா.ஜ,. வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

இது குறித்து பா.ஜ. தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜேஷ் சோன்கர் கூறுகையில் , மோடி அரசின் நல்ல திட்டங்கள் குறித்து துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது.எங்களது வேட்பாளர் பெயரிலேயே துளசி உள்ளது. தொகுதியின் ஐந்து மண்டலங்களில் இது வரையில் 10 ஆயிரம் துளசி செடிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. விரைவில் மேலும் 30 ஆயிரம் வீடுகளுக்கு துளசி செடியை வநியோகிக்க முடிவு செய்துள்ளோம் என கூறினார்.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இந்தூர் -1 வது தொகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ.,வுமான சஞ்சய் சுக்லா கூறியதாவது: காங்., கட்சி ஹர் ஹர் மகாதேவ், கர் கர் மகாதேவ் என்ற கோஷத்தை கையில் எடுத்துள்ளது. தற்போதைய கொரோனா கால கட்டத்தில் மக்கள் குறைந்த அளவிலேயே சிவன் கோவிலுக்கு வருகின்றனர்.
இதன்காரணமாக அவர்களுக்காக ஹரித்துவாரில் இருந்து மினியேச்சர் சிவலிங்கம் வரவழைத்துள்ளோம். சுமார் 40 ஆயிரம் குடும்பங்களுக்குவழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . அனைவரும் இந்துக்களாக இருக்கும் நிலையில் ஷ்ரவான் மாதத்தில் மக்களுக்கு ஏன் சிவலிங்கத்தை விநியோகிக்க கூடாது எனவும் கேட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE