செப்.,1 ல் 35 லட்சம் பேருக்கு கொரோனா: ஆய்வில் தகவல்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (5)
Advertisement
பெங்களூரு: நாட்டில், தற்போது கொரோனா அதிகரிப்பதை போல் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வந்தால், செப்., 1ல் 35 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள்.செப்., கணக்கின்படி, மஹாராஷ்டிராவில் 6.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 2.1 லட்சம் பேர் சிகிச்சையில்
coronavirus, covid 19, coronavirus outbreak, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19

பெங்களூரு: நாட்டில், தற்போது கொரோனா அதிகரிப்பதை போல் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வந்தால், செப்., 1ல் 35 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள்.

செப்., கணக்கின்படி, மஹாராஷ்டிராவில் 6.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 2.1 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பர். டில்லியில் 2.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 81 ஆயிரம் பேர் சிகிச்சையிலும் இருப்பார்கள். தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 53 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். குஜராத் மாநிலத்தில் 1.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 61 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். கர்நாடகாவில் மட்டும் 2.1 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 71,300 பேர் சிகிச்சையில் இருப்பார்கள். அதில், செப்., 2வது வாரத்தில், இந்தியாவில் 4.78 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள்.


latest tamil news




2021 மார்ச்சில் 37.4 லட்சம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டிருப்பார்கள். 1.4 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 1.88 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆய்வை நடத்திய பேராசிரியர்கள் சஷிகுமார், தீபக் குழுவினர் கூறுகையில், செப்.,1 கணக்கின்படி இந்தியாவில் 1.4 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். அதில், மஹாராஷ்டிராவில் 25 ஆயிரம், டில்லியில் 9,700 பேரும், கர்நாடகாவில் 8.500 பேரும், தமிழகத்தில் 6.300 பேரும், குஜராத்தில் 7.300 பேரும் உயிரிழந்திருப்பார்கள்.அதேபோல், நவ., 1 ல் இந்தியாவில் 1.2 கோடி பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதில் 30.2 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். அதேபோல், ஜன.,1 ல் 2.9 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதில் 60 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 10 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். ஆனால், 2021 மார்ச் இறுதி வரை, கொரோனா பாதிப்பு எப்போது உச்சம் பெறும் என கணிக்க முடியவில்லை. அதேநேரத்தில், 6,18 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 82 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வர, 28 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilnesan - Muscat,ஓமன்
17-ஜூலை-202017:56:10 IST Report Abuse
Tamilnesan ஊடங்கள் எதிர்மறை செய்தியில் எவ்வளவு ஆர்வம் காட்டுகின்றன பாருங்கள். மேலும், இது முற்றிலும் யூகத்தின் அடிப்படையில் வெளி வந்துள்ள செய்தி. ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி தடுப்பூசி பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரப்போகிறது. அதன்பிறகு தானே, செப்டம்பர்? தடுப்பூசி போட்ட பிறகு, கொரநா எப்படி வரும்??
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
16-ஜூலை-202016:25:32 IST Report Abuse
kattus ஏன் குழப்பம் ,எல்லாரும் செத்திருவாங்கன்னு சொல்லிடு .
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூலை-202016:01:06 IST Report Abuse
oce ஐஐஎஸ்சி இந்த புள்ளி விவரங்களை எங்கிருந்து எடுத்தானுங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X