பெங்களூரு: நாட்டில், தற்போது கொரோனா அதிகரிப்பதை போல் தொடர்ந்து கொரோனா அதிகரித்து வந்தால், செப்., 1ல் 35 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என இந்திய அறிவியல் மையம் (ஐஐஎஸ்சி) ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள்.
செப்., கணக்கின்படி, மஹாராஷ்டிராவில் 6.3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 2.1 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பர். டில்லியில் 2.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 81 ஆயிரம் பேர் சிகிச்சையிலும் இருப்பார்கள். தமிழகத்தில் 1.6 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 53 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். குஜராத் மாநிலத்தில் 1.8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 61 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். கர்நாடகாவில் மட்டும் 2.1 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 71,300 பேர் சிகிச்சையில் இருப்பார்கள். அதில், செப்., 2வது வாரத்தில், இந்தியாவில் 4.78 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள்.

2021 மார்ச்சில் 37.4 லட்சம் பேர் கொரோனா பாதிக்கப்பட்டிருப்பார்கள். 1.4 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 1.88 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆய்வை நடத்திய பேராசிரியர்கள் சஷிகுமார், தீபக் குழுவினர் கூறுகையில், செப்.,1 கணக்கின்படி இந்தியாவில் 1.4 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். அதில், மஹாராஷ்டிராவில் 25 ஆயிரம், டில்லியில் 9,700 பேரும், கர்நாடகாவில் 8.500 பேரும், தமிழகத்தில் 6.300 பேரும், குஜராத்தில் 7.300 பேரும் உயிரிழந்திருப்பார்கள்.அதேபோல், நவ., 1 ல் இந்தியாவில் 1.2 கோடி பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதில் 30.2 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 5 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். அதேபோல், ஜன.,1 ல் 2.9 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். அதில் 60 லட்சம் பேர் சிகிச்சையில் இருப்பார்கள். 10 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். ஆனால், 2021 மார்ச் இறுதி வரை, கொரோனா பாதிப்பு எப்போது உச்சம் பெறும் என கணிக்க முடியவில்லை. அதேநேரத்தில், 6,18 கோடி பேர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். 82 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வர, 28 லட்சம் பேர் உயிரிழந்திருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE