பொது செய்தி

இந்தியா

லடாக்கில் படைகள் விலக்கப்படுவதை ஆய்வு செய்ய வேண்டும்: இந்திய ராணுவம்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
india, china, army, LAC, face-off, Disengagement, border crisis, indo-china border, Indian Army,

புதுடில்லி: லடாக்கின் கிழக்கு பகுதியில் படைகளை முற்றிலும் வாபஸ் பெறுவது மிகவும் சிக்கலானது எனவும், அது குறித்து அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டும் எனவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

லடாக்கின் கிழக்கு பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி தாக்கியதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் பதிலடியில் சீன வீரர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதை அந்நாடு வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. இந்த மோதலால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க இரு நாட்டு ராணுவ உயரதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனடிப்படையில், நான்காவது கட்ட ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்தது. லடாக்கின் சுஷூல் பகுதியில் செவ்வாய் காலை 11 மணி முதல், புதன் அதிகாலை2 மணி வரை சுமார் 15 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.


latest tamil news


இது தொடர்பாக இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: லடாக்கின் கிழக்கு பகுதியில் இருந்து, முதல்கட்டமாக படைகள் விலக்கி கொள்ளப்பட்டது குறித்து இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் ஆலோசனை நடத்தினர். மேலும் படைகளை வாபஸ் பெற்று கொள்வது குறித்தும் ஆய்வு செய்தனர். முற்றிலும் ராணுவம் விலக்கி கொள்ளப்படுவதற்கு இரு தரப்பும் உறுதிபூண்டுள்ளன. ஆனால், இந்த நடவடிக்கை மிகவும் சிக்கலானது. தொடர்ச்சியாக ஆய்வு செய்ய வேண்டும். அதனை, தொடர்ச்சியாக தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் தொடர்ந்து முன்னெடுத்து சொல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Viswam - Mumbai,இந்தியா
16-ஜூலை-202020:46:01 IST Report Abuse
Viswam தற்போதைய செய்தி - சீனா பிங்கர் போர் பகுதியிலிருந்து தனது ராணுவத்தை அகற்ற மறுப்பு. அப்புறம் என்ன பதினஞ்சு மணி நேர பேச்சு வார்த்தை ? நமது ராணுவம் அங்கிருந்து நகரக்கூடாது
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
16-ஜூலை-202019:25:27 IST Report Abuse
Darmavan பேச்சு வார்த்தையின்ர பெயரில் நாளை கடத்தி இவன் எதோ தளவாடங்கள் தயாரிக்கிறான் ./குவிக்கிறான் நாம் உஷராக இருக்க வேண்டும்.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
16-ஜூலை-202018:28:35 IST Report Abuse
Chandramoulli முன்னுக்கு பின் முரணாக இருப்பான் இந்த சீனாக்காரன் . நம்ப முடியாது இவன் செயலை . ஏமாற்று வேலை . மணிக்கணக்கில் பேசுகிறான் என்றால் இவன் போர்தந்திரம் எதோ செய்கிறான் . உசார் . நம்பாதே சீனாவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X