கொரோனா தடுப்பூசி அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும்: ரஷ்யா

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
மாஸ்கோ: பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் மாத மத்தியில் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 1.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
Russia, DefenseMinistry, CoronaVaccine, Developed, Safe, August, ரஷ்யா, அமைச்சர், கொரோனா, தடுப்பு மருந்து, தடுப்பூசி, ஆகஸ்ட்

மாஸ்கோ: பாதுகாப்பான கொரோனா தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் மாத மத்தியில் தடுப்பு மருந்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவி வருகிறது. இதுவரை 1.36 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தின் உருவாக்க ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் செசனோவ் மருத்துவ பல்கலை மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பற்றிய உலகின் முதல் மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துவிட்டதாக தெரிவித்தது.


latest tamil news


இது குறித்து ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: கொரோனா தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனையில் பாதகமான நிகழ்வுகள், சுகாதார பிரச்னைகள், சிக்கல்கள் அல்லது பக்க விளைவுகள் எதுவும் இல்லாமல் பாதுகாப்பாக மீண்டனர். சோதனைகளின் முடிவுகள் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் நல்ல சகிப்புத்தன்மை குறித்து நம்பிக்கையை அளித்துள்ளது.


latest tamil news


தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படுகிறது, ஆன்டிபாடிகள் உருவாக்கப்படுகின்றன. அது நம்மை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கின்றன. இம்மாத இறுதிக்குள் மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சோதனை முடிவில் எதிர்பார்த்த பலன் கிடைத்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தடுப்பு மருந்தைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Senthil kumar - coimbatore,இந்தியா
16-ஜூலை-202021:27:00 IST Report Abuse
Senthil kumar மிக சிறப்பு ...
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
16-ஜூலை-202021:03:01 IST Report Abuse
venkatan Indian universities are reluctant to do medical researches becos of the aristocratic guidemanship to swindle money from grants.The medical research should be of paramount importance.The outdated indian research protocol should be thoroughly streamlined and always results oriented towards a predetermined target. The Russians are showing the way in an emergency situation to save millions of lives,why if fast track trials prey some lives if it is? The indian research red tapism should The govt should act the force stop the research project s which are not yielding results and the existing researchers replaced to some fruitful work t to community well-being.
Rate this:
Cancel
RameshNagarajan - Chennai,இந்தியா
16-ஜூலை-202018:42:03 IST Report Abuse
RameshNagarajan Whether developed by russia or america or india, the thing important is the vaccine that alone matters. If the korona problem is solved by that, it'll be a great relief to the people all over and around the world. Korona has taught us great lessons to the mankind as a whole. So hereafter, atleast, let us all forget and get rid of all our identities with e, creed, ger, colour, etc. Etc. and live peacefully and let others live as well.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X