சீனாவில் அடுத்த வாரம் திரையரங்குகள் திறப்பு

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
China, Reopen, Cinemas, corona crisis, covid 19 pandemic, worldwide crisis, coronavirus count, corona toll, corona in china, சீனா, திரையரங்கு, தியேட்டர், திறப்பு,

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்த திரையரங்குகளை, அடுத்த வாரம் முதல் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் குறைவான அபாயமுள்ள பகுதிகளில் சினிமா திரையரங்குகள் ஜூலை 20 முதல் மீண்டும் செயல்பட துவங்கும். ஆனால் காய்ச்சல் குறித்து திரையிடுவதுடன், கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென சீன திரைப்பட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு காட்சிக்கும் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் 30 சதவீதத்திற்கு மேல் டிக்கெட்களை விற்க கூடாது. திரைப்படத்திற்கு செல்வோர் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் இடைவெளியை பின்பற்ற வேண்டுமெனவும் கூறியுள்ளது.


latest tamil news



சீன திரைப்பட நிர்வாகிகள், ஜனவரி முதல் மூடப்பட்டிருந்த திரையரங்குகள், கடந்த மார்ச் மாதம் திறப்பதாக அறிவித்திருந்தனர். ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்ததை அடுத்து, அதே மாதத்தில் தங்களது முடிவை சீன திரைப்பட உரிமையாளர்கள் திரும்ப பெற்றனர். வியாழன்று, சீனாவில் வெளிநாட்டில் இருந்து திரும்பியவரால், புதிதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இருப்பினும் பெரும்பாலான பகுதிகள் கொரோனா பாதிப்பு ஏற்பட குறைந்த அபாயமுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.


latest tamil news



சீனாவில் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் சினிமா துறை கடும் நஷ்டத்தை சந்தித்துள்ளது. சீனாவில் மிகப்பெரிய சினிமா திரையரங்க நிறுவனமான வாண்டா பிலிம்ஸ், முதல் அரையாண்டில் குறைந்தபட்சம் 214 பில்லியன் அளவுக்கு நஷ்டத்தை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூலை-202017:29:13 IST Report Abuse
Janarthanan நம்ம ஊரு சீன கைக்கூலிகள் /இம்ரான் ரசிகர் மன்றம் இந்தியாவில் கொரோன போற வரைக்கும் சீனாவில் போய் இருந்து விட்டு வாங்க அவன் தான் கட்டு படுத்தி விட்டேன சொல்லுகிறான் ???
Rate this:
Cancel
Karthik - Doha,கத்தார்
16-ஜூலை-202017:06:04 IST Report Abuse
Karthik சீனாவைப்பற்றிய செய்தி எதற்கு?
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
16-ஜூலை-202017:05:35 IST Report Abuse
S. Narayanan உலக மக்கள் அனைவரையும் கொரோனாவில் சிக்க வைத்து விட்டு சைனா காரன் சினிமா பார்க்கிறான். உலகமே அவனை மன்னிக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X