பொது செய்தி

இந்தியா

ஊரடங்கு முடியும் வரை போராட்டம் நடத்த தடை: நீதிமன்ற உத்தரவால் கேரள அரசு நிம்மதி!

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஊரடங்கு முடியும் வரை அரசியல் கட்சிகள் பேரணி, போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த, கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவத் துவங்கியுள்ளது. இதுவரை, 9,500 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 பேர்

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஊரடங்கு முடியும் வரை அரசியல் கட்சிகள் பேரணி, போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த, கேரள உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.



latest tamil news




கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவத் துவங்கியுள்ளது. இதுவரை, 9,500 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது கேரளாவை தங்கக் கடத்தல் வழக்கு உலுக்கிவருகிறது. இது தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் செல்வதும், போராட்டத்தில் ஈடுபடுவதுமாக உள்ளனர். இதற்கு தடை கோரி, வழக்கறிஞர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், ஷாஜி பி சாலே ஆகியோர் முன் விசாரிக்கப்பட்டது.


latest tamil news



'தேசிய பேரிடர் மேலாண்மே ஆணையம் கடந்த மாதம் 29ம் தேதி அறிவித்த வழிகாட்டலின்படி, பொது மக்கள் கூட்டமாகக் கூடுவதை அனுமதிக்க முடியாது. மேலும், அரசியல் கட்சிகள் போராட்டம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், பேரணி ஆகியவை நடத்துவதும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாகும். ஊரடங்கு முடியும் வரை, (வரும் 31ம் தேதி வரை) அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம், பேரணி நடத்தத் தடை விதிக்கப்படுகிறது' என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனால் ஆளும் கட்சியினர் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
samvijayv - Chennai,இந்தியா
16-ஜூலை-202023:07:42 IST Report Abuse
samvijayv சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு 'கொரானா' கொடிய நொய்க்கு எதிராக ஊரடங்கு முடக்கம் உத்தரவு பிறப்பித்தது, அவர்கள் கூறியது 'NRC, CAA' போராட்டம் கூடாது என்பது ஜனநாயகத்து எதிரானது மோடி அரசு மக்களை ஒடுக்க பார்க்கிறது. இப்பொழுது மேலும் தங்கம் வேட்டை தொடர இந்த அரசாணை பிறப்பித்துள்ளது இடதுசாரி ஆளும் கேரளா. இப்படி எடுத்துக்கொள்வோமா?.
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
16-ஜூலை-202020:27:14 IST Report Abuse
Balasubramanian Ramanathan தும்மினாவே கொடி தூக்ர கும்பலுக்கு வந்த சோதனைய பார்த்தீங்களா. இன்னும் இருக்கு. கவலைபடாதீங்க.
Rate this:
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
16-ஜூலை-202022:13:28 IST Report Abuse
uthappaThis is a blessing and disguise for Kerala government.Not a testing time....
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
16-ஜூலை-202018:30:48 IST Report Abuse
Chandramoulli கொடிபிடிப்பது உண்டிக்குலுக்கிகளின் முக்கிய கொள்கை ஆச்சே . இதை மற்ற கட்சிகள் பின்பற்றினால் கோவம் வருகிறது. ஸ்வப்னா சுந்தரி வலையில் எல்லோரும் சிக்கி சின்னாபின்னமாகி விட்டார்கள் என்பது தான் உண்மை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X