திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை: கமல் ஆறுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை: கமல் ஆறுதல்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (22)
Share
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ‛மதிப்பெண் மட்டுமே அளவுகோல் அல்ல என்றும், திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை எனவும் மாணவர்களுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கருத்து பதிவிட்டுள்ளார்.தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியிடப்பட்டது. இதில் தேர்வெழுதிய மாணவர்-மாணவிகள் 92.3 சதவீதத்தினர்
கமல், பிளஸ்2, தேர்வு முடிவுகள், திறமைகள்

சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ‛மதிப்பெண் மட்டுமே அளவுகோல் அல்ல என்றும், திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை எனவும் மாணவர்களுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் கருத்து பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (ஜூலை 16) வெளியிடப்பட்டது. இதில் தேர்வெழுதிய மாணவர்-மாணவிகள் 92.3 சதவீதத்தினர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவியர் 94.8 சதவீதமும், மாணவர்கள் 89.41 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது மாணவர்களை விட மாணவியர் தேர்ச்சி விகிதம் 5.39 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் அரசு பள்ளிகள் 85.94 சதவீதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 94.30 சதவீதமும் தேர்ச்சி பெற்றன.


latest tamil news


தேர்வில் குறைந்த மதிப்பெண் அல்லது தேர்ச்சிப் பெறாமல் தவறியவர்களுக்கு மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் ஆறுதல் அளிக்கும் வகையில் டுவிட் செய்துள்ளதார். அவரது டுவிட்: மாணவ கண்மணிகள், பரீட்சைகளும், மதிப்பெண்களும் மட்டுமே உங்களின் அளவுகோல் அல்ல. அதிக மதிப்பெண் பெற்று மகிழ்ந்திருப்போருக்கு வாழ்த்துக்கள். பெற்றோர் வருந்த வேண்டாம். திறமைகளை தேர்வுகள் மட்டும் அளவிடுவதில்லை. வாழ்க்கை உங்களுக்காய் காத்திருக்கிறது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X