மதக்கலவரம் ஏற்படுத்த முயற்சி: யுடியூப் சேனல் நிர்வாகி சரண்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (77)
Share
Advertisement
சென்னை : ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது, மதக்கலவரத்தை துாண்டுதல் உட்பட, ஐந்து பிரிவுகளில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சேனல் நிர்வாகி புதுச்சேரி போலீசில் சரணடைந்தார்.'கருப்பர் கூட்டம்' யு டியூப் சேனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது
மதக்கலவரம்,யுடியூப், சேனல், நிர்வாகி, சரண்,கருப்பர்கூட்டம்,  கந்தசஷ்டி,

சென்னை : ஹிந்து கடவுள்களை இழிவுப்படுத்தி, யு டியூப் சேனலில் வீடியோ வெளியிட்டவர்கள் மீது, மதக்கலவரத்தை துாண்டுதல் உட்பட, ஐந்து பிரிவுகளில், போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் ஏற்கனவே ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், சேனல் நிர்வாகி புதுச்சேரி போலீசில் சரணடைந்தார்.

'கருப்பர் கூட்டம்' யு டியூப் சேனலை நடத்தி வரும், சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த சேனலை தடை செய்ய வேண்டும்' என, சென்னை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பா.ஜ., வழக்கறிஞர் அணி தலைவர், பால் கனகராஜ், 13ல் புகார் அளித்தார்.

இந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை கோரி, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர், ராம.ரவிகுமார் என்பவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்தார். இதுகுறித்து, சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், சர்ச்சைக்குரிய, யு டியூப் சேனல்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் மீது, இந்திய தண்டனை சட்டம், 153. ஆத்திரமூட்டி கலகம் ஏற்படுத்துதல், 153 ஏ, பேச்சு, எழுத்தால், மத, இன, மொழி, ஜாதி, சமய விரோத உணர்ச்சிகளை துாண்டிவிட முயற்சி செய்தல், 505 (1) மதக்கலவரத்தை துாண்டுவது என, ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


சரண்சுரேந்தர் நடராஜன் மற்றும் அவரது கூட்டாளி களை, தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.இந்நிலையில், சேனலின் நிர்வாகிகளில் ஒருவரான, வேளச்சேரியைச் சேர்ந்த, செந்தில்வாசன், 49 என்பவரை நேற்று இரவு போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.


latest tamil news
இந்நிலையில், யுடியூப் சேனல் நிர்வாகி, சுரேந்தர் நடராஜன், புதுச்சேரி மாநிலம், அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேசனில் சரணடைந்தார். அவரை, சென்னைக்கு அழைத்து வர தமிழக போலீசார் தீவிரமாக உள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (77)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஜூலை-202018:08:58 IST Report Abuse
இறைவனுக்கே இறைவன் மஹாவிஷ்ணு ஏமாறாமல் இருப்பார்கள்..
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஜூலை-202005:18:34 IST Report Abuse
J.V. Iyer இப்போது நடப்பது திமுக அரசா, அதிமுக அரசா என்று தெரியவில்லை. ஹிந்துக்கள் பாடு எப்போதும் திண்டாட்டம் தான். அது சரி, சிவகுமார் குடும்பம் இதுபற்றி பேசாமல் மௌனம் காப்பது எதற்காக? இந்த ஹிந்துதுரோக கூட்டத்தை ஆதரிக்கிறார்களா?
Rate this:
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
16-ஜூலை-202022:51:17 IST Report Abuse
Enrum anbudan அடுத்தவர்கள் உணர்வுகளை , நம்பிக்கைகளை மதிக்க தெரியாத ஈனர்கள் மத்தியில் நாம் வாழுகின்றோம் என்று நினைக்கும்போது மனது கணக்கின்றது. தமிழ் கூறும் நல்லுலகு இவ்வளவு கேவலமாக ஆகிவிட்டது என்று நினைக்கும்பொழுது இதை மாற்ற ஒருவன் வரமாட்டானா என்று இறைவனிடம் மனது இறைஞ்சுகின்றது. மற்றவர்களுக்கு அறிவுரையும் , இதிகாசங்களையும் , சிலப்பதிகாரம் , திருக்குறள் போன்ற நல்ல காப்பியங்களையும் இந்த உலகுக்கு தந்த இந்த தமிழ்நாடு இந்த ஈனர்களையும் தந்திருக்கின்றது எனும்பொழுது மனதில், கடவுள் ஏதோ ஒன்றை இந்த உலகுக்கு இவர்கள் மூலமாக உரைக்க விளைகின்றான் என்று நினைக்கின்றது . இவர்களால் உருவாக்கம் ஒன்றும் இல்லை இந்த உலகுக்கு , மற்றவர்களின் உணர்வுகளை கிழித்து கூறு போடுகின்ற கேவலமான கூலிப்படைகள் ஆகிவிட்டார்கள் நமது தமிழர்கள் என்று நினைக்கும்பொழுது மனம் வேதனை படுகின்றது . எல்லா வினைகளுக்கு ஒரு எதிர்வினை என்று இவர்கள் அறியும் காலம் விரைவில்........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X