ஏழைகள் கையில் பணத்தை கொடுங்கள்: அபிஜித் அட்வைஸ்| Govt needs to put more money in hands of poor, says Abhijit Banerjee | Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஏழைகள் கையில் பணத்தை கொடுங்கள்: அபிஜித் அட்வைஸ்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (43)
Share
புதுடில்லி: பொருளாதாரத்தை மீட்க ஏழைகள் கையில் பணத்தை கொடுக்க வேண்டும் என நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ் பரவலால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் அத்யாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து சேவைகளும் தடைப்பட்டன. இதன் காரணமாக எந்த நிறுவனமும்
Abhijit Banerjee, global economy, Money, Poor, Nobel laureate, india, government, corona, coronavirus, covid-19, corona cases, அபிஜித் பானர்ஜி, பணம், ஏழைகள், தீர்வு

இந்த செய்தியை கேட்க

புதுடில்லி: பொருளாதாரத்தை மீட்க ஏழைகள் கையில் பணத்தை கொடுக்க வேண்டும் என நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதில் அத்யாவசிய சேவைகள் தவிர்த்து அனைத்து சேவைகளும் தடைப்பட்டன. இதன் காரணமாக எந்த நிறுவனமும் செயல்படவில்லை. இதனால், இந்திய பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது.


latest tamil news


இந்நிலையில், தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் ஏற்பாடு செய்த கலந்தாய்வு நிகழ்ச்சி ஒன்றில் நோபல் பரிசு வென்ற இந்தியரான அபிஜித் பானர்ஜி கலந்து கொண்டார். அதில் அவர் பேசியதாவது: இந்தியாவில் தற்போது கொரோனாவால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைக் குறுகிய கால அடிப்படையில் நிவர்த்தி செய்ய வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது. நாட்டிலுள்ள ஏழை மக்கள் அனைவரின் கைகளிலும் தேவையான பணத்தைக் கொடுக்க வேண்டும். இப்போது கொடுக்கப்படும் நிதியுதவி மிகவும் குறைவு. அது குறுகிய கால அடிப்படையில் தீர்வாக இருக்காது. சமூக நலத் திட்டங்களில் உடனடியாகக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X