பிரேசில் அதிபருக்கு மீண்டும் கொரோனா உறுதி

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
பிரேசிலியா: 'வீட்டில் தனித்திருக்க முடியவில்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும்' எனக்கூறி மீண்டும் பரிசோதனை செய்து கொண்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. தினமும் 40 ஆயிரம் பேர்பிரேசிலில் கடந்த சில நாட்களாக தினமும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்றும் 40

பிரேசிலியா: 'வீட்டில் தனித்திருக்க முடியவில்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும்' எனக்கூறி மீண்டும் பரிசோதனை செய்து கொண்ட பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியாகியுள்ளது.



latest tamil news





தினமும் 40 ஆயிரம் பேர்


பிரேசிலில் கடந்த சில நாட்களாக தினமும் 40 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. நேற்றும் 40 ஆயித்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை, 19.7 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோராவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார்.'நான் நலமுடன் இருக்கிறேன். காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை. நான் பணிக்குச் செல்ல வேண்டும். வீட்டில் தனித்திருக்க முடியவில்லை' எனக்கூறிய போல்சனோரா, மீண்டும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். இந்நிலையில் மருத்துவப் பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனா தொற்று இருப்பது மீண்டும் உறுதியானது.


latest tamil news




'கொரோனாவைப் பற்றி மக்கள் கவலைப்படக் கூடாது. முகக்கவசம் அணியத் தேவையில்லை. மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும்' என, பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனோரா கூறி வந்தார். இதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. 'ஜெய்ர் போல்சனோராவின் அலட்சியமே பிரேசிலில் கொரோனாவால் அதிகப்படியான பாதிப்பு ஏற்படக் காரணம்' என, பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
16-ஜூலை-202019:04:55 IST Report Abuse
Nathan அவர் வேலைக்கு போகாவிட்டால் பதவியை கோரமா நாக்கௌட் பன்னிரூவான்களே. ஸ்பெயின் ரத்தம்பா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X