பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் போலீசார்; கோவையில் 5வது காவல் நிலையம் மூடல்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை: கோவையில் போலீசார் மத்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஐந்தாவதாக இன்று, உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டுள்ளது.



latest tamil news




கொரோனா வைரஸ் தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த, சுகாதாரம், மருத்துவம், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் காவல்துறை என, பல்வேறு துறைகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதில், போலீசாரின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு விதி மீறுபவர்களை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி மக்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல நேர்வதால், கோவையில் பணியாற்றும் போலீசாருக்கு கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. போலீசாருக்கு தொற்று ஏற்படுவதால், அவர்கள் பணியாற்றும் காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன.


latest tamil news



கடந்த ஏப்., மாதம் போத்தனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த ஆறு போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன்பின், குனியமுத்தூர், துடியலூர், பெரியநாயக்கன் பாளையம், அன்னூர், கோட்டூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணிபுரிந்த போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரத்தில், போத்தனூர், குனியமுத்தூர், துடியலூர், சூலூர் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரிந்த 23 போலீசாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது; அந்த காவல் நிலையங்கள் மூடப்பட்டன. உக்கடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ் வாகன டிரைவருக்கு இன்று தொற்று உறுதியானது. இதையடுத்து உக்கடம் காவல் நிலையம் மூடப்பட்டது; தற்காலிகமாக வின்சென்ட் ரோட்டில் உள்ள பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது.
கோவையில் கடந்த ஒரு வாரத்தில் 24 போலீசாருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது; ஐந்து காவல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. போலீசார் மத்தியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் காவல் துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-202023:56:59 IST Report Abuse
தல புராணம் நம்மூர் போலீஸோட தொப்பை உலக ஃபேமஸ்..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
16-ஜூலை-202023:55:56 IST Report Abuse
தல புராணம் லஞ்சம் தவிர்.. பணத்தை தீண்டாதே.. கொரோனா உன்னை நெருங்காது..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X