பொது செய்தி

தமிழ்நாடு

கலை, அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020
Share
Advertisement
தமிழகம், கலை, அறிவியல், படிப்புகள்,  ஆன்லைன், விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கு வரும் 20ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன. கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு வரும் 20 ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.


latest tamil news




பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் சேர வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.tngptc.in, www.tngptc.com என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

சந்தேகம் ஏதும் இருப்பின், கட்டுப்பாட்டு அறைகளை 044 22351014, 22351015 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X