பொது செய்தி

தமிழ்நாடு

கோவை கலெக்டர் அலுவலக பணியாளர் உட்பட 52 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர் உட்பட இன்று 52 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



latest tamil news




கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளுக்கான அலுவலகங்கள் உள்ளன. அவற்றில் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்று, 63 பேருக்கு வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஊரக உள்ளாட்சித் துறைப் பிரிவில் பணியாற்றும், கணினி உதவியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்கள் சந்தித்த நபர்களுக்கும் கொரோனா பரிசோனை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


latest tamil news




இன்று, 11 வயது சிறுமி உட்பட, 24 பெண்கள்; 27 ஆண்கள் என, 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; கொரோனா சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,644 ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு அதிகரித்துவருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
16-ஜூலை-202019:49:15 IST Report Abuse
தமிழ் மைந்தன் கோவையில் மட்டுமே ஒன்றினைவோம் திட்டம் வெற்றி.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X