திருப்பதி கோவில் அர்ச்சகர்கள் 15 பேருக்கு கொரோனா உறுதி

Updated : ஜூலை 16, 2020 | Added : ஜூலை 16, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருமலை: திருமலை திருப்பதி கோவிலில் 15 அர்ச்சகர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.



latest tamil news



கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முதற்கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து கோவில் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டன.

இதனிடையே ஆந்திரமாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி கோவில் கடந்த ஜூன் மாதம் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டது. இதனிடையே கோவில் அர்ச்சகர்களில் 50 பேரில் 15 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 25 பேரின் பரிசோதனை முடிவுகள் வர உள்ளன.

இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி அனில் குமார்சிங்கூறியதாவது: கடந்த 10 ம் தேதி வரையில் திருமலையில் 1,865 ஊழியர்களுக்கும், அலிபிரியில் 1,704 ஊழியர்களுக்கும் பக்தர்கள் 631 பேருக்கும் கொரோனா சோதனைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் யாருக்கும் உடல் நல பிரச்னைகள் இல்லை. அவர்களை தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்து வருகிறோம் என கூறினார்.


latest tamil news



சித்தூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறுகையில் பக்தர்களிடம் இருந்து பெறப்பட்ட பரிசோதனையில் முடிவுகள் அனைத்தும் எதிர்மறையாக வந்துள்ளன.என
கூறினார்.

இதனிடையே கோவில் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கோவில் தரிசனத்தை தற்காலிகமாக நிறுத்தப்ட வேண்டும் என நிர்வாக அதிகாரிக்கு கடிதம் எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
18-ஜூலை-202009:37:11 IST Report Abuse
Sampath Kumar பகவன் அருள் புரியட்டும்
Rate this:
Cancel
Charles - Burnaby,கனடா
17-ஜூலை-202002:34:03 IST Report Abuse
Charles இப்போது தெரிகிறதா கடவுள் அருகில் போல் இருப்பவர்களுடைய உண்மை முகம் கடவுள் அருகிலிக்கும் 50 அர்ச்சகர் எல்லாவற்றிலுமே சுத்தமாக இருக்க வேண்டும் இல்லை என்றல் தண்டிக்க படுவார்கள்...கடவுளால்
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஜூலை-202022:51:42 IST Report Abuse
Tamilan ஏன் இந்த தேவையில்லாத பலப்பரீச்சை ?. மதச்சார்பின்மை அரசுகளால் ஆட்டுவிக்கப்படும் கோவில் அதிகாரிகள் , ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு அர்ச்சகர் பொறுப்பு என கோமாளி வேலை செய்துவிட்டு, கோவிலில் கொடுக்கும் தீர்த்தத்திற்கு பதில் கொரானா மருந்து சேர்த்து கொடுத்திருக்க தவறிவிட்டார்கள் . அந்நிய நாடுகளிலும் வெறும் சரசு மசூதிகளில் இதெல்லாம் கொடுக்கப்படுவதில்லை . அதனாலதான் நாடுமுழுவதும் மட்டுமல்ல உலகமுழுவதும் இந்த நிலை . கோவில் குலம் என்று இருந்தவர்களுக்கு உலகமெல்லாம் விஞ்சான பதவி கொடுத்ததால் , கொரநா பற்றி ஒன்றும் அறியாத அவர்களால் இப்படி ஒரு நிலையை சமாளிக்க முடியவில்லை . உடனடியாக அரசியல் சட்ட அரசுகளின் அறநிலைய துறை தீர்த்தத்தை , மாத்தவேண்டும் அல்லது அங்குள்ள அர்ச்சகர்களை கலையெடுக்கவேண்டும் . அனைத்தையும் அரசியல் சட்டத்திற்கு முன்பிருந்த நிலைக்கு இட்டு செல்ல வேண்டும் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X